| 4. ðöñ¬ôòï¢î£î¤ |
|
| |
இறவாத வாநந்த வெள்ளத் தழுத்தி யெனையருளால் துறவாத வாநந்த வாள்வதென் றோமெய்த் துறவர்தொழும் அறவாத வாநந்த னஞ்சூழ் முதுகுன் றடைந்தவர்தம் உறவாத வாநந்த கோபால னென்றற் குடையவனே.
|
(62) |
| |
| |
விளங்க வலம்புரி மால்போற்று நன்முது வெற்பகஞ்சேர்ந் துளங்க வலம்புரி யாய்மாய் பிறிதொ ருடம்படையாய் துளங்க வலம்புரி மென்குழன் மாதர்க்குச் சூழ்ந்துநின்று களங்க வலம்புரி யிவ்வெற்பை யேநிலை கைவருமே.
|
(64) |
| |
|
| |
61. இறவாத-கெடாத. அவாநந்த-அவாக் கெடுமாறு. அறவா-அறவடிவினனே! தவாநந்தனம்-அழிவில்லாத பூஞ்சோலை. உறவா-உறவாக விருப்பவரே. 62. மடங்கல்-சிங்கத்தைப் போன்ற நமன். உடைய-ஆற்றல் கெட. மடங்கல் முகன் காய்ந்த வீர-திருமாலாகிய நரசிங்கத்தைப் பிளந்த வீரமுடையவரே! கடையம்-கடையேமாகிய யாம். மடங்கு-மாறி மாறி வருகின்ற. விடையம் அடங்கல்-பொறியடங்கல். 64. வரை-மேருமலை. பவவன் பிணி-பிறவியாகிய வலிய நோய். மருந்தா-மருந்தானவரே! தவரை-தவஞ்செய்பவர்களை. உயிர் செகுத்து-உயிரைக் கொன்று. அம்புலி-திங்கள். ஆதவர்-கதிரவர்.
|
|
|
|