பக்கம் எண் :

2450.

     பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
          பேராசை யெல்லாம் பிளக்கும் மருந்து
     மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
          வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. நல்ல

உரை:

     பொருட் பேராசை - பொருள் மேல் உளதாகும் பெரிய ஆசை. இறைவனைச் சான்றோர் 'எல்லாம் வல்ல இறைவன்' என்று வாழ்த்துவது பற்றி, “எல்லாம் வல்ல மருந்தென்று வாழ்த்தும் மருந்து” என்று கூறுகிறார்.

     (20)