பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

105

மாறநாயனார் இளையான் குடியினர் என்பதையும், மெய்ப்பொருள் நாயனார் வெல்லுமா மிகவல்ல பண்பினர், என்பதையும், விறல்மிண்டர் குன்றூரைச் சார்ந்தவர், என்பதையும் எறிபத்தர் வேல் ஏந்திய நம்பி என அவரது படையின் சிறப்பையும், [ஏனாதிநாதர்க்கு எந்த அடைமொழியும் காணப்பட்டிலது] கண்ணப்பர் கலைமலிந்த என்ற கலை அறிவையும், கலய நாயனார் கடவூரினர் என்பதையும், மானக்கஞ்சாறர் தோள்மலிந்த வள்ளல் எனத்தோள் சிறப்பும் கொடைச்சிறப்பும் உடையவர் என்ற குறிப்பையும், தாயனார் எஞ்சாதவாள் என அவர் தம் வாள்சிறப்பையும், ஆனாயர் அலைமலைந்தபுனல் மங்கை என அவர்தம் ஊர்ச்சிறப்பையும்,  மூர்த்திநாயனார் மும்மையால் உலகாண்ட என்ற அவர்தம் வரலாற்றுக்குறிப்பையும், (முருகநாயனார் உருத்திர பசுபதியார் எந்தவித அடைமொழியின்றியும் குறிப்பிடப்பட்டவர்கள்) திருநாளைப் போவார் செம்மையே என்ற அவர் தம் பண்பின் மேன்மையினையும் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார்க்கு எந்த விதமான அடைமொழியும் இலது.) சண்டேசுரர் தம் தாதையார் தாளை வெட்டிய வரலாற்றுக் குறிப்பையும் திருநாவுக்கரசர் திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட என அவர்தம் பண்பின் மேம்பாட்டையும், குலச்சிறையார் பெருநம்பி என்ற அடையின் மூலம் ஆடவரில் சிறத்தவர் என்ற குறிப்பையும், (நம்பி என்பது விகுதி பெறாத ஆண்பால் சிறப்புப் பெயர்.  இப்பெயர் கண்ணப்பர்க்கும் அப்பூதி அடிகளார்க்கும், நமிநந்தி அடிகளார்க்கும், கனம்புல்லர்க்கும்,  முனையடுவார்க்கும், இடகழியார்க்கும், கோட்புலியார்க்கும் கொடுக்கப் பட்டுள்ளதையும் அறிக) பெருமிழலைக் குறும்பர் என அவர்தம் ஊரினைச் சார்த்தியும், (பேயார்-கரைக்கால் அம்மையார்.  எந்த அடைமொழியும் இன்றிக் குறிப்பிடப்பட்டவர்) அப்பூதியார் ஒருநம்பி என்பதையும், திருநீலநக்கர் சாத்த மக்கையைச் சார்ந்தவர் என்பதையும், நமிநந்தி அடிகளார் அருநம்பி என்பதையும், திருஞானசம்பந்தர் இறைவன் திருவடியன்றி வேறு எதையும் போற்றாதவர் என்பதையும்