பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

111

திருநாவுக்கரசர் தம் வாக்கில் தம் பெயர் அமையும் பேறு பெற்றவர்.

    திருநீலநக்கர் சாத்தமங்கை வேதியர்.  சிவலிங்கத்தின் மீது இருந்த சிலந்தியைத் தம் வாயால் ஊதிப்போக்கிய காரணத்தால் மனைவியாரை நீக்கியவர்.  இறைவர் “வாயால் ஊதிய இடம் தவிர்த்து ஏனைய இடங்கள் கொப்புளம் இருத்தலைக் காண்”
எனக் கூறும் வாய்ப்புப் பெற்றவர்.

    நமிநத்தி அடிகள் ஏமப்பேறூரார்.  நீரால் திருவாரூரர்க்கு விளக்கு எரித்தவர்.

    திருஞானசம்பந்தர் அமணர் வலி தொலைய இளையவயதில்  சீர்காழிப் பெருமானைப் பாடியவர்.  தேவியின் திருவருள் பெற்றவர்.  செங்கட் சோழர்,  முருகநாயனார்,  திருநீலநக்கர் இவர்கள் பெயரைத் தம் பதிகத்தில் மொழிந்தவர்.  சீர்காழிப் பதியினர்.

    ஏயர்கோன் கலிக்காமர் ஏயர் குடியினர்.  வன்தொண்டர் சூலை நோய் தீர்ப்பார் என்றபோது, தம் உடைவாளால் குத்திக்கொண்டு அந்நோயைத் தீர்த்துக் கொண்டவர்.

    திருமூலர் சாத்தனூர் இடையன் உடம்பில் புகுந்து, இறைவன் வேதத்தைத் தமிழில்பாடிப் பரவவிட்டவர்.

    தண்டி அடிகள் கண் பார்வை இன்றியே கயிறு பிடித்துக்கொண்டே குளத்தில் இறங்கித் தரை வெட்டி அகலமாக்கியவர்.  சமணர்கள் கண் இழக்க இவர் இறைவன் அருளால் கண் பார்வை பெற்றவர்.

    மூர்க்கர் திருவேற்காட்டின் மன்னர்.  சூதாடிப் பொருள் அடைந்து சிவனடியார்க்கு ஈந்தவர்.  கும்பகோணம் சென்றும் இவ்வாறு பணி புரிந்தவர்.