த
திருநீலகண்ட
யாழ்ப்பாணர்:
திருஎருக்கத்தம் புலியூரின்
பாணர். சம்பந்தர் பாடலுடன் தம் யாழ் இசை கூட்டியவர்.
சடையனார்:
திருநாவலூரினர்; சுந்தரரைப் பெற்றவர்.
இசைஞானியார்:
சுந்தரரைப் பெற்றவர்.
சுந்தரர்:
நம்பி ஆரூரர் என்னும் பெயரினர். இறைவர் ஆவணம் காட்டி அடிமை என நிறுவப்பெற்றவர். திருநாவலூர்க்குத்
தலைவர். திருவருட்துறை இறைவர்க்கு நான் ஆள் எனப்பாடியவர். திருத்துருத்தி, வேள்விக்குடி
இறைவா, உன்னை மறந்த குற்றம் நீங்க அருள்க என்று வேண்டியவர். வன்தொண்டர் என்னும் பெயரினர்.
திருவாரூரன் என்னும் பெயரினர். சங்கிலியாருடன் இன்பம் துய்த்தவர். தமக்கு அடைகாய் தரும்
கூனன் குருடனுக்கு அருள் புரிந்தவர். திருப்புகலூர் இறைவன் பால் செங்கல்லைப் பொன்னாகப் பெற்றவர்.
முதலையுண்ட பாலனை அழைத்தவர். திருமுருகன் பூண்டியில் வேடரைப் படுத்தவர். நூல்போன சங்கிலியை
மணந்தவர். திருமுது குன்றூரில் பெற்ற பொன்னைத் திருவாரூரில் பெற்றவர்.
மேலே கூறப்பட்டவை
நம்பியாண்டார் வாக்கால் அறியக் கிடைப்பன.
சைவத் திருமுறைகளின்
மூலம் நாயன்மார்கள் அனைவர்களைப்பற்றிய குறிப்புக்களை அறிய முடியவில்லை. ஒருசிலரைப் பற்றிய
குறிப்புக்களே காணக் கிடைக்கின்றன. முதல் மூன்று திருமுறைகளில் பன்னிருவர் பற்றிய
குறிப்புக்கள் அறியவருகின்றன. அவர்கள் சண்டேசுவரர், கண்ணப்பர், நமிநந்தி அடிகள், கோச்செங்கட்
சோழர், முருகர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீலகண்ட
யாழ்ப்பாணர், தண்டியடிகள், புகழ்த்துணையார் ஆவர்.
சண்டேசுவரரைப்பற்றி
அறியும்போது அவரது வரலாற்றைப் பெரிதும் அறிகிறோம். அவர் தம் தாதைதாளை வெட்டி
|