பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

119

    சிறுத்தொண்டரைப்பற்றி பாடுகையில் அவர் தம் திருமகனார்  பெயரையும்  அவர் வாழ்ந்த ஊரையும் இணைத்து,

    “சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடிமேய”

என்று பாடிக்காட்டினர்.

    திருநீலநக்கரைக் குறித்துக் கூறும்போது அவர் இன்ன ஊரினர் என்பதை,

        நிறையினார் நீலநக்கர் நெடுமாநகர்
            என்று தொண்டர்
        அறையும்ஊர் சாத்த மங்கை
            அயவந்தி

என்று அருளிப்போந்தார்.

    மங்கையர்க்கரசியாரைப் பற்றிப் பாடும்போது, அவ்வம்மையார். சோழன் மகளார், மானி என்னும் பெயரார், பாண்டிமாதேவியார், திருநீற்றை வளர்ப்பவர் என்று குறிப்பிட்டிருப்பதை,

    “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
        வரிவளைக்கை மானி”என்றும்,

    “சிவன் திரு நீற்றினை வளர்க்கும் பந்தணைவிரலாள்
        பாண்டிமா தேவி”என்றும்,

பாடிய பாடல்களால் தெளிக.

    குலச்சிறையாரைக் குறிப்பிடும்போது,

    “கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை”
    “வெற்றவே அடியார்மிசை வீழும் விருப்பினன்”
    “அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடுபணியும்
                                              குலச்சிறை”
    “கோவணம் பூதிசாதனம் கண்டால் தொழுதெழு
                                        குலச்சிறை”
    “நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி”