பக்கம் எண் :

New Page 1

140

             காப்புப் பருவம்

    திரு பிள்ளை அவர்கள் பொய்யடிமை இல்லாத புலவர்கள் சங்கப் புலவர்கள் என்று உளம் கொண்டு அவர்கள் இலக்கியம், இலக்கணம், மெய்ஞ்ஞான போதநூல் யாவற்றையும் உணர்ந்தவர்கள் என்பது உண்மையே.  நக்கீரர், திருமுருகாற்றுப் படை பாடியுள்ளனர்.  அங்ஙனம் பாடுதற்குக் காரணம்,

    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிடப்
   
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
   
சென்று பயன்எதிர்ச் சொன்ன பக்கமும்

என்னும் தொல்காப்பிய நூற்பாவைப் படித்ததன் பயனாகும்.  நக்கீரரது கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்னும் நூலில்,

                                நின்னில்,
    வெளிப்படுவது ஏழ்உலகும் மீண்டே ஒருகால்

   
ஒளிப்பதுவும் ஆனால் உரை

என்னும் கருத்து மெய்ஞ்ஞான போத நூல் அறிவினால் ஏற்படுவது. இது சைவசித்தாந்த நூல் அறிவுக்கருத்தாகும்.

    கபிலதேவ நாயனாரது நூலாகிய சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் நூலில் வரும்,

    இல்லை பிறவிக் கடல்ஏறல் இன்புறவில்
    முல்லை கமழும் முதுகுன்றில்-கொல்லை

   
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொன்
   
சடையானைச் சாராதார் தாம் “ 

என்னும் வெண்பாவின் கருத்துத் திருக்குறளாம் இலக்கியத்தில் வரும்,

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
   
இறைவ னடிசேரா தார்

என்ற பாடலைப் படித்ததன் பயனே ஆகும்.  இதனால் இலக்கியங்களைப் பயின்றவர் என்பது புலனாகிறது.  திரு பிள்ளை