பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

141

அவர்கள் புரகரனையே பாடியவர்கள் சங்கப் புலவர்கள் என்பது பதினோராம் திருமுறையில் நக்கீரர், கபிலர், பரணர் பாடியுள்ள பாடல்களைக் கண்டு ஆகும்.  சங்கப் புலவர்களுள் ஒருவரான பரணர்.

    பேச்சுப் பெருகுவதென் பெண் ஆண் அலிஎன்ற
   
பேச்சுக் கடந்த பெருவெளியைப் - போச்சுக்   
   
குரையானை ஊனுக் குயிரானை ஒன்றற்
   
குரியானை நன்னெஞ்சே உற்று

என்று சிவபெருமான் திருவந்தாதியில் பாடியிருப்பதால், மெய்யடிமை வாய்ந்த சங்கப் புலவர் என்றனர் போலும் ! 

    எண்மர் ஆவார் : 

    பொய்யடிமை இல்லாத புலவர் :  இவர்களைப் பற்றிப் பல தடைவிடைகளுடன் மேலே கூறப்பட்டது.

    புகழ்ச்சோழர் :  இவர் உறையூரில் அரசு புரிந்தவர்.  சைவம் தழைக்க ஆலயங்களில் பூசனை நடத்துவித்தவர்.  சிவனடியார் குறிப்பு அறிந்து ஒழுகியவர்.  இவர்க்குக் கீழ்படியாதவன் அதிகன் என்னும் பெயரினன்.  அவன் மலையரணில் வாழ்ந்தவன்.  அவனை வென்று வருக என்று கட்டளை பிறப்பிக்க, அதிகன் ஓடி ஒளிந்தான்.  ஆனால், வீரர்கள் அவனது பொருள்களையும் அவனது வீரர்களின் தலைகளையும் கொணர்ந்தனர்.  அத்தலைகளில் சடைத்தலை ஒன்றிருக்கக் கண்டு, இவரையுமா கொல்லுதற்குக் காரணனானேன் என்று, அத் தலையுடன் தீயில் ஐந்தெழுத்து ஓதி இறங்கி, இறைவன் திருவடி உற்றவர்.

    இவரது ஆட்சியில் சிவகாமி ஆண்டார் என்பவர் மலர்த்தொண்டு செய்து வந்தனர்.  அவருக்குத் தீங்கிழைத்த புகழ்ச் சோழரது யானையை எறிபத்தர் வெட்டினார்.  அதனை அறிந்தசோழர் எறிபத்தரைக் கண்டு செய்திகளை நேரே அறிந்ததும், அத்தகைய யானையை உடைய நான்தான் தவறுடையன் என்று கூறித் தம்மையும் வெட்டுமாறு எறிபத்தரிடம் வாளை நீட்டியவர்.