பக்கம் எண் :

New Page 1

144

             காப்புப் பருவம்

    சீலமில ரேனும் திருநீறு சேர்ந்தாரை
   
ஞாலம்இகழ்ந் தருநரகம் நண்ணாமல் எண்ணுவார்
   
பாலணைந்தார் தமக்களித்த படிஇரட்டிப் பொன்
                                    ( கொடுத்து

   
மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடை
                                     ( கொடுத்தார்

என்றதாலும், அதிபத்தர் தம் வறுமை நிலையிலும்,

“ பொன் திரள்சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்
ஒன்றும் மற்றிது என்னைஆ ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடும் திரித்தார்

ஆதலாலும், கலிக்கம்பர் தம் நியமம்தவறாதபடி,

        வெறித்த கொன்றை முடியார்தம்
           
அடியார் இவர்முன் மேவுநிலை
       
குறித்து வெள்கி நீர்வாரா
           
தொழிந்தாள் என்று மனம்கொண்டு
       
மறித்து நோக்கார் வடிவாளை
           
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
       
தறித்துக் கரக நீர்எடுத்துத்
           
தாமே அவர்தாள் விளக்கினார்

என்பதாலும், கலியநாயனார்

        செக்குநிறை எள்ஆட்டிப்
           
பதம்அறிந்து திலதைலம்
       
பக்கம்எழ மிகஉழந்தும்
           
பாண்டில்வரும் எருதுய்த்தும்
       
தக்கதொழில் பெறுங்கூலி
   
        தாம்கொண்டு தாழாமை
       
மிக்கதிரு விளக்கிட்டார்
           
விழுத்தொண்டு விளக்கிட்டார்

என்பதாலும், சத்திநாயனார்,