பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

159

    இறைவன் சோதி வடிவினன் என்பதைச் சைவ நூல்களில் எங்கும் காணலாம்.  “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி “  என்பர் மணிமொழியார்  “சீர் ஒளிய தழற் பிழம்பாய் நின்ற திகழ் ஒளியை “  என்பர் அப்பர், எனவே, அவர் அருஞ்சோதி இறைவர் சிவசத்தியுடன் சேர்ந்து காரியம் புரிதலையும்.  அருளே சத்தி என்பதையும் சிவஞான சித்தியார் அழகுற,

அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை இன்றித்
தெருள்சிவம் இல்லை அந்தச் சிவம்இன்றிச் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்டு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்

என்கிறது.  இதனால் அவன் அருளே அவாம் காரி எனப்பட்டான்.

    இன்னோரன்ன பொருட்செறிவினை அடக்கியே  “ ஐந்ததிகாரி  *** அருளே அவாம்     ஆங்கரி “  எனச் சிவபெருமானைத் திரு பிள்ளை அவர்கள் குறித்தனர்.

    கணம்புல்லர்  “ தங்கள் பிரான் திருவுள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டர் ஆதலினாலும், காரி நாயனார் மன்னர்பால் பெற்ற, நிதிக் குவைகொண்டு சங்கரனார் இனிதமரும் தானங்கள் பல சமைத்துச் சீர் அடியார் எல்லார்க்கும் மேவுற்ற இருநிதியம் மிக அளித்தும் வந்தமையாலும், நெடுமாறர் திருநீற்றின் நெறி விளங்க அரசு புரிந்தமையாலும், வாயிலார்,  “ மறவாமையால் அமைந்த மனக்கோவில் உள் இருத்தி, உறவாதிதனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி, இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி, அறவாணர்க்கன்பென்னும், அமுதமைத்து அர்ச்சனை செய்தமையாலும், முனியடுவார் தாம் பெற்ற நிதியெல்லாம் ஈசன் அடியார்கள், சொன்ன சொன்னபடி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் கன்னல் நறுநெய் கறி தயிர் பால் கனியுள்உறுத்த கலந்தளித்துமன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டாற்றி வந்தமையாலும் இறைவர் விரும்பும்