ந
நிலையில் இந்நாயன்மார்கள்
திகழ்ந்தனர். ஆகவே இவர்கள் “ முதல் அமர்ந்த “ என்ற அடைகொடுத்துச் சிறப்பிக்கப்பட்டனர்.
சேக்கிழார் இவர்களை
“ முடியிட்டதிருவிளக்கு எரித்தார்தம் கழல்பேணி ,” “ கரியார் கழல் வணங்கி “ “ மாறனார்
செங்கமலக் கழல் வணங்கி, பெருந்தகையார் தமைப் போற்றி “ “ முனை அடுவார் விரை பூங்கமலக்
கழல் வணங்கி “ எனவும் முறையே போற்றி இருத்தலில், திரு பிள்ளை அவர்களும் “ ஐவரும் மகிழ்ச்சியுற
ஏத்தெடுப்பாம் “ என்றனர்.
(8)
கடல்சூழ்ந்த உலகெலாம்
9. கடல்சூழ்ந்த
யாப்புஅமர் அறம்சூழ்ந்த நெஞ்சக்
கழல்சிங்க
மன்னன்மன்னிக்
கழியா மடம்கழி
இடங்கழி அருட்கே
கருத்துணை
செருத்துணைஅரில்
விடல்சூழ்ந்த
சிந்தையொர் இகழ்த்துணை பெறாதுற
விளங்கும்
புகழ்த்துணைவய
வேட்புலி எனும்திருக்
கோட்புலிஇவ் ஐவரையும்
மேல்மேலும்
ஏத்தெடுப்பாம்
அடல்சூழ்ந்த
தொண்டர்வர லாற்றுவிரி உலகெலாம்
அறியத்
தெருட்டுகுரவிற்
கமையப்
புனைந்ததுகொல் சாதிஅடை யாளம்கொல்
அமையும்எது
சொலினும்என்ன
மடல்சூழ்ந்த
செங்குவளை மாலைஅணி திண்தோள்
வலத்தனை
நிலத்தனைவரும்
வாயார வாழ்த்துகுன்
றத்தூர் உதித்தபெரு
வள்ளலைக்
காக்கஎன்றே
(அ. சொ.)
அடல்-வலிமை, சூழ்ந்த-நிறைந்த, தெருட்டு-மனம் தெளியச் செய்து, குரவிற்கு-ஆசிரியத் தன்மைக்கு,
புனைந்தது-சூடியது, சாதி-வேளாளர் இனம்,
|