பக்கம் எண் :

இத

164

             காப்புப் பருவம்

இதனைச் சேக்கிழாரே விளக்கியுள்ளார்.  வேளாள மரபினரான இளையான் குடிமாறர் குவளை மலர் அணிந்திருந்ததை  “ வேரித்தாரான் “  என்ற தொடரால் விளக்கினார்.  வேரித்தார் ஈண்டுக் குவளை மாலை.  சேக்கிழார் குருவும்.  வேளாளரும் ஆகையால்,  “ குரவிற் கமையப் புனைந்தது கொல் சாதி அடையாளம்கொல் அமையும் எது சொலினும் என்ன மடல் சூழ்ந்த செங்குவளை மாலை அனிதிண் தோள் வலத்தன் “  என்று புகழ்ந்து பாராட்டப்பட்டனர்.  சேக்கிழார் உள்ளத் திட்பம் உடையார்போல் உடல் திட்பமும் அமைந்தவர் என்பதை அறிவிக்கவே,  “ திண்தோள் வலத்தன் “ எனப்பட்டார்.

    சேக்கிழாரைப் போற்றாதவர் இவர்.  மேலும், இவரைப் போற்றுபவர் அறிவு சான்ற பெருமக்கள் மட்டும் அல்லர் ;  பண்புடைய மக்கள் அனைவருமே போற்றுவர்.  இதனைச் சேக்கிழார் வரலாற்றுப் புராணத்துள்,

        காவல னார்இவர் தவர்இவர் காவலர்
            கவரி இடத்தகு மோஎன்பார்
        சேவையர் காவல னார்சிவ மான
            சிறப்பிது நல்ல சிறப்பென்பார்
        தேவரும் எழுதவோ ணாமறை
            யைத்தமிழ் செய்து திருபதி கம்பாடும்
        மூவரும் ஒருமுதல் ஆய்உல கத்து
            முளைத்த முதல்பொருள் தான்என்பார்

என்றும்,

        மின்மழை பெய்தது மேக ஒழுங்குகள்
            விண்ணவர் கற்பக விரைசெய்பூ
        நன்மழை பெய்தனர் சேவையர் காவலர்
            நாவலர் இன்புற நாவாரச்
        சொன்மழை பெய்தனர் இரவலர் மிடிகெட
            அள்ளி முகந்தெதிர் சோழேசன்
        பொன்மழை பெய்தனன் உருகிய நெஞ்சொடு
            கண்மழை அன்பர் பொழிந்தார்கள்

என்றும் வருதல் கொண்டு நன்கு உணரலாம்.