என
என்றனர் அப்பர்
பெருமானார். மேலும் அவரே, “ ஆர்ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற
அருளும் தோன்றும் “ என்றும் கூறியுள்ளனர்.
உரைசேரும் எண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனி
பேதம்
நிரைசேரப் படைத்தவற்றின்
உயிர்க்குயிராய் நின்றான்
என்றனர் திருஞானசம்பந்தர்.
அருண் நந்தி சிவாசாரியார்,
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்
தாம்வருவர்
என்றனர்.
இன்னோரன்ன எடுத்துக்
காட்டுக்களால் சிவபெருமானே அவ்வச் சமயக் கடவுளராக இருந்து அருள் புரிதலின், அவ்வச் சமயத்தவர்களும்
இறையடியில் அன்புடையராய் அவனைச் சார்ந்தவர்கட்கும் தாம் அடிமையாள் என்ற குறிக்கோளுடன் தான்
நம்பி ஆரூரர் குறித்தனர் என்ற குறிக்கோளை நன்கு உணர்ந்து கூறிய சேக்கிழார் பெருமான் தம் நுண்ணறிவுத்
திறனை என்னென்று வியப்பது ! இதனால் சைவ சமயத்தின் ஏற்றத்தை உணர்த்திய அறிவுத் திறனையும்
நாம் வியக்காமல் இருக்க முடியாது. இறைவனாம் சைவ சமயத்திற்கும் குறுகிய ஒரு நாட்டிற்கும் மட்டும்
உரியவர் அல்லர். சிவபெருமான் உலக முழுமைக்கும் உரியவர் என்ற கருத்தினால்தான் சேக்கிழார்தம்
நூலின் ஈற்றில்,
மன்று ளார்அடி யார்அவர்
வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி
உலகெலாம்
என்று முடித்துக் காட்டினார்.
ஈண்டு, திரு பிள்ளை
அவர்களின் கவிச் சிறப்பையும் அறிதல் வேண்டும். இதுவரையில் தனி அடியார்களைச் சுட்டிப்
பாடிய பாடல்களில் ஒரு சொல்லால் மட்டும் அவர்களின் திருவடிகளை வணங்குவாம் என்று பாடியுள்ளனர்.
ஈண்டுத் தொகை அடியார்களைக் கூறுகிறார். ஆதலின், அவர்கள் பற்பலர் என்றதனால், ஒரு
சொல்லால் வணக்கத்தை அறிவிக்
|