பக்கம் எண் :

நூ

214

             செங்கீரைப் பருவம்

நூலுக்கு இட்ட பெயர் தொண்டர் புராணம் என்பதே ஆகும்.  இதனை அவரே,

        இங்கிதன் நாமம் கூறின்
            இவ்வுல கத்து முன்னாள்
        தங்கிருள் இரண்டில் மாக்கள்
            சிந்தையுள் சார்ந்து நின்ற
        பொங்கிய இருளை ஏனைப்
            புறத்திருள் போக்கு கின்ற
        செங்கதி ரவன்போல் நீக்கும்
            திருத்தொண்டர் புராணம் என்பாம்

என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு அறியலாம்.  இதனால்தான்  “ தொண்டர்கள் புராணத்துள் “ என்றனர்.  உலகெலாம் என்னும் தொடர் இறைவனால் எடுத்துக் கொடுக்கப்பட்டு அருள் செய்யப்பட்டமையினால்தான் தொண்டர் சீர்பரவுவார் நூல் இனிது முடிந்தது.  ஆகவே, ஈண்டு இறை அருள் பொலிவான் நிரம்பு சொற்கள் “ எனப்பட்டது.

    செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்
    அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்
    இப்பொரு ருட்கென் உரைசிறி தாயினும்
    மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்

என்று கூறியுள்ளார்.  இதனையே ஈண்டுச் “செப்பலுற்ற பொருள்“ என்று குறிப்பிட்டனர்.  பொருள் என்பதற்குக் குழந்தை என்பதும் பொருள். “ஒண் பொருளும் நீ“ என்று அப்பர் வாக்கில் இப்பொருள் இருத்தலைக் காண்க. “தம் பொருள் என்ப தம் மக்கள்“ என்ற வள்ளுவர் வாக்கும் இப்பொருளதே.  உலகில் பொதுவாகக் குழந்தைகள் மொழியும் சொற்கள் மழலை மொழிகள் என்றும் குதலை மொழிகள் என்றும் கூறப்பட்டு, அவை பொருள் நிரம்பா மொழிகள் என்று கருதப்படும்.  ஆனால், சேக்கிழாராம் மதலையின் மழலை மொழிகள் அவ்வாறு பொருள் பயவா நிலையில் இன்றிப் பொருள் செறிவுடையனவாய் யாவரும் பயனுறற்குரியனவாய் உள்ளன.  அப்படி இருக்க  “ நீர் ஏன்.