New Page 1
செப்பலுற்ற என்ற செய்யுளைப்
பாடினீர், என்று வினவு முகத்தால் சேக்கிழாரின் மொழிச் சிறப்பை உணர்த்தினர். சில நூல்களில்
உள்ள பாடல்களை இவை இடைச் செருகல் என நீக்க முயல்வர். அங்ஙனம் செப்பலுற்ற என்ற செய்யுளை
நீக்க இயலாது. ஆகவே, அதனை ஒருவரிய என்று அடை கொடுத்துப் பாடினர். குன்றத்தூர் செல்வமிக்க
ஊர் என்பதை இது போதும் காணலாம். நீர்வளத்திற்கே குறைவற்ற ஊர். ஆகவே, அது திருவமிகு
குன்றையெனக் கூறப்பட்டது.
மனுநீதி கண்ட புராணத்துள்
இறந்த ஆன்கன்றும். அரசகுமாரனும் இறைவன் திருவருளால் உயிர் பெறுகின்றனர். இங்ஙனம் உயிர்பெற்று
எழுந்த நிலையி்னைச் சேக்கிழார் பெருமானார் குறிப்பிடுகையில்,
அந்நிலையில் உயிர்பிரிந்த
ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும்
மந்திரியும் உடன்எழலும்
இன்னபரி சானான்என்
றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றால்
முடியாத பொருள்உளதோ
என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பாடலில் இறையருள் பொலிவான்நிரம்பு சொற்கள் இருத்தலைக்காண்க. இங்ஙனம் சேக்கிழாரின்
சொல்லிலும், பொருளிலும், தோய்ந்தன்றோ திரு பிள்ளை அவர்கள் இப்பிள்ளைத் தமிழைப்
பாடுகின்றனர். திரு பிள்ளை அவர்கள் சேக்கிழார் பெருமானை நோக்கி பெருமானே ! உங்கள்
சொற்கள் பயனுறாத சொற்களா? நாங்கள் பயன் அடையாமல் இருக்க ஒண்ணுமோ? நீங்கள் மறுத்து
உரைத்தாலும் உங்கள் நூலில் உள்ள மொழிகளால் நாங்கள் பயன் கொளவல்லவராக
இருக்கின்றோம். இதற்கு நீங்களே சான்று. நீங்களே “ செப்பலுற்ற “ என்ற செய்யுளைச் செப்பியுள்ளீர்கள்.
இந்தப் பாடலைப் பாடி இருக்க உங்கள் சொற்களின் பயனை நாங்கள் உணர்தல் இல்லை என்றால் (மழவா)
பிள்ளைத் தமிழில் பாடி மகிழ்வதும் பொய்யாகும் அன்றோ என்று கூறிச் சேக்கிழார் சொல் வல்லமையினை
எடுத்து மொழிந்துள்ளார்.
(13)
|