அளவ
அளவிலாத
பெருமையர் ஆகிய
அளவிலாத
அடியார்
என்றும், காரைக்கால்
அம்மையார் புராணத் தோற்று வாயில்,
மயிலைப்
புறம்கொள் மென்சாயல்
மகளிர்
கிளவி யாழினொடும்
குயிலைப்
பொருவும் காரைக்கால்
அம்மை
பெருமை கூறுவதே
என்றும் பாடிக் காட்டினார்.
சேக்கிழார்
பெருமானார் எடுத்து விளக்கவேண்டிய அடியார்கள் ஒருவர் அல்லர் ; பலர். அவர்கள் பலராக
இருப்பதற்கேற்ப அவர்களது செயல்களும் பல திறப்பட்டவை. அங்ஙனம் பல வகைப்பட்டனவாயினும்,
அவர் அவர் செயல்களை அறிந்து செப்பிய மாண்பு சேக்கிழார்க்கே உரித்தாயது. அதனால் அன்றோ
“வாக்கினால் செல்லவல்லபிரான் “ என்று போற்றினர் சிவஞான முனிவர்.
காரி நாயனார் திருக்கடவூரினர் ;
தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றவர். கவிபாடும் திறனும் அமைந்தவர். அக்கவிகள்
சொல் நயம் பொருள் நயம் நிரம்பியவை. அவற்றை மூவேந்தர்கள்முன் பாடிக்காட்டிப் பரிசில்பெற்று,
அப்பரிசில் பொருளைக்கொண்டு திருக்கோயில்களைக் கட்டிச் சிவனடியார்களுக்கு உதவி வாழ்ந்து
வந்தவர். இவ்வாறான செயல்களைச் சேக்கிழார் பெருமானார்.
மறையாளர்
திருக்கடவூர்
வந்துதித்து
வளர்தமிழின்
துறையான
பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால்
குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர்
பால்பயில்வார்
|