அங
அங்கவர்தாம்
மகிழும்வகை
அடுத்தஉரை
நயமாக்கிக்
கொங்கலர்தார்
மன்னவர்பால்
பெற்றநிதிக்
குவைகொண்டு
வெங்கண்அரா
வொடுகிடந்து
விளங்கும்இளம் பிறைச்சென்னி
சங்கரனார்
இனிதமரும்
தானங்கள்
பலசமைத்தார்
யாவர்க்கும் மனம் உவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கும் முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிகஅளித்து
விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்
என்று விளக்கமாகக் கூறியருளினர்.
இங்குக் கூறப்பட்ட
செயல்களுக்குரிய போதுமான குறிப்புக்கள், நம்பியாண்டார் நம்பிகள் காரி நாயனாரைப் பற்றிப்
பாடிய பாடலில் காணப்படவில்லை. அப்பாடல்,
புல்லன வாகா வகைஉல கத்துப்
புணர்ந்தனவும்
சொல்லின வும்நய
மாக்கிச் சுடர்பொன் குவடுதனி
வில்லனை வாழ்த்தி
விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்
கல்லின மாமதில் சூழ்கட
ஊரில் காரியையே
என்பது.
இப்பாடலால் இந்நாயனார்
எவரிடம் பொருள் பெற்றார், அப்பொருளை என் செய்தார் என்பன போன்ற செயல்கள் பெறப்பாடாமையை
உணர்க. இந்நிலையில் அரிய குறிப்பைச் சேக்கிழாரே தெரிந்து செப்பினர் என்றால், இவரது
பலவகை ஆய்வுத்திறனை அறிவிக்கவும் வேண்டுமோ ‘ இவரது அறிவு உவக்கும் தன்மையது அன்றோ !
மற்றும் தொண்டர்களின்
செயல் நுட்பங்களையும் தெரிந்து கூறும் பேராற்றல் பெற்றவர் நம் சேக்கிழார் பெருமானார்.
|