பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

221

    திருக் குறிப்புத் தொண்ட நாயனார் வண்ணார் வகுப்பினர்.  அவ்வகுப்பினர் செயலையும் சேக்கிழார் நன்கு அறிந்து கூறும்திறம், மிகமிகப் பாராட்டற்குரியது.  திருக்குறிப்புத் தொண்ட நாயனார் குலத்தொழிலை.

        குறித்த பொழு தேஒலித்துக்
            கொடுப்பதற்குக் கொடுபோந்து
        வெறித்தடநீ்ர்த் துறையின்கண்
            மாசெறிந்து மிகப்புழுக்கி

என்று குறிப்பிட்ட குறிப்பைக் காண்க.

    மாசெறிதலாவது,  நீரில் தோய்த்துக் கல்லில் மோதல், புழுக்கலாவது உவர்மண் ஊட்டி வெள்ளாவி வைத்தல்.  இச்செயல்கள் நுட்பமான செயல்கள் அல்லவோ?

    அடியவர்கள் அன்பின் மிகுதியால் செயற்கரிய செயல்களைச் செய்பவர்.  அங்ஙனம் செயற்கரிய செயல்களைச் செய்பவர்கட்கு ஏற்ற முறையில் இறைவனும் திருவருள் சுரக்க வேண்டியவனாய் உள்ளான்.  சிறுத்தொண்டர் நாயனார் வைரவராக வந்த இறைவர் விருப்பப்படி தம் மைந்தனைத் தடிந்து கறியமுதாக்கி உணவு படைத்தனர்.  அவ்வாறு படைத்த அடியவர்க்கு இறைவர் எம்முறையில் அருள் செய்தனர்? துணித்துக் கறியமுதாக்கப்படட் மகனை எழுப்பித் தந்தனர்.  காட்சி தருகின்றபோதும், ஏனைய அன்பர்கட்குத் தாமும் தம் தையலுமாக இருந்து காட்சியளிப்பதுபோல் காட்சியினை அளிக்காமல், தம் இளைய குமாரனாம் முருகனுடன் காட்சி தந்தனர்.  இவ்வாறு காட்சி அளித்ததன் குறிப்பு யாது? குழந்தையை அறுத்துக் கறி சமைத்துப் படைக்க என்று கேட்ட யாம், மகனைப் பெறாத மாண்பிலி போலும், என்று கருதாதே.  யாமும் உன்போல மகனைப் பெற்ற மாண்பினரேம்.  உன் அன்பின் மாட்சியை அவனி யறியவே இங்ஙனம் உன்னைச் செய்யுமாறு செய்தோம் “  என்பதை விளக்கவே என்பதன்றோ? இதனைச் சேக்கிழார், “ திருவாக்கிய மலையந்த