New Page 1
தையலோடும் சரவணத்துத்
தனயரோடும் தாம் அணைவார் “ என்ற அடியில் காண்க.
குன்றையாளியார்
வாக்கில் திட்பமும் உண்டு என்பதனை அவர் சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு வணக்கம் கூறும் இடங்களில்
நன்கு காணலாம்.
மலர்மிசை அயனும்
மாலும் காணுதற் கரிய வள்ளல்
பலர்புகழ் வெண்ணெய்
நல்லூர் ஆவணப் பழமை காட்டி
உலகுய்ய ஆண்டு
கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலைமிசை வைத்து வாழும்
தலைமைநம் தலைமை ஆகும்.
என்றும், “முதலைவாய் நின்று
மீட்டார் கழல்கள் நினைவாரைமீளா வழியின் மீட்பனவே“ என்றும், “கூனும் குருடும் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம், யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழுபிறப்பின் முடங்கூன் “ என்றும்
பாடித் தமது திட்ப நிலையினை அறிவித்துள்ளதைக் காணலாம்.
சேக்கிழார் பெருமானாரது செந்தமிழ்த் தொடை நடைக்கு நூல் முழுமையுமே சான்றாகும்.
அவ்வண்ணம்
தொழுதுரைத்த
அமைச்சர்களை
முகநோக்கி
மெய்வண்ணம்
தெரிந்துணர்ந்த
மனுவென்னும்
விறல்வேந்தன்
இவ்வண்ணம்
பழுதுரைத்தீர்
என்றெரியின்
இடைத்தோய்ந்த
செவ்வண்ணக்
கமலம்போல்
முகம்புலர்ந்து
செயிர்த்துரைப்பான்
“ உண்டிநாலு விதத்தில்
ஆறுசுவைத்திறத் தினில்ஒப்பிலா
அண்டர் நாயகர்தொண்டர்
இச்சையில் அமுதுசெய்ய
அளித்துள்ளார் .”
“ தடக்கை ஐந்துடைத்
தாழ்செவி நீள்முடி
கடக்க ளிற்றைக்
கருத்துள் இருத்துவாம் “
என்ற எடுத்துக் காட்டுகளே
ஸ்தாலிபுலாக நியாய முறையில் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்-என்ற மரபுபடி
|