பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

223

காட்டப்பட்டன.  இங்குக் கூறப்பட்ட பாடலைப் படிக்கும் போது நடையழகு துள்ளி விளையாடுவதைக் காண்க.

    அடைமொழிகளை அருளும்போதும் சமயத்துக்கேற்ப அமைக்கும் திறன் சேக்கிழார் ஒருவர்க்கே உண்டு.   “ அந்த மில் புகல் ஆலாலசுந்தரன் “  என்று அடைகொடுத்துப் புகழ்ந்தார்.  இது புராணத் தொடக்கத்தில் கூறப்பட்டது.  இதனை நன்கு மனத்தில் நினைவு கொண்டு பின்னால் சுந்தரரைப்பற்றிச் சங்கிலியாரிடத்தில் கூறும் வாய்ப்பு வாய்க்கும் போது,

        சாரும் தவத்துச் சங்கிலிகேள்
            சால என்பால் அன்புடையான்
        மேரு வரையின் மேம்பட்ட
            தவத்தான வெண்ணெய் நல்லூரில்
        யாரும் அறிய யான்ஆள
            உரியான் உன்னை எனைஇரந்தான்
        வார்கொள் முலையாய் நீயவனை
            மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்

என்று குறிப்பிட்டார்.

    இப்பாடலால் சுந்தரர் அந்தமில் புகழ் ஆலாலசுந்தரன் என்று அடைகொடுத்துப்பேசப்பட்டது பொருத்தம் என்பது புலனாகின்றதன்றோ?

    திருவாரூருக்கு உள்ள சிறப்புப் பலவாகும்.  அத்தகைய சிறப்புக்களுள் ஒன்று, தேர் விழாச் சிறப்பாகும்.  ஏனைய சிறப்புக்களைக் கற்றறிந்தவர்களே அறிய நேரிடும்.  ஆனால், கற்றவர்களும், கல்லாதவர்களும் திருவாரூரைப் பற்றி அறிந்த சிறப்புத் தேர்ச் சிறப்பு எனில், அது மிகையன்று.  இதனைத்   “ திருவாரூர் தேர் அழகு “  என்று வழங்கப்பட்டு வரும் பழமொழி கொண்டும் தெள்ளத் தெளிய உணரலாம்.  இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டு அன்றோ, நம் சேக்கிழார் பெருமானார்,  “ தேராரும் நெடுவீதித் திருவாரூர் “