என
என்று அடைமொழி அமைத்துப்
பாடியருளினர். இந்த அடைமொழியன்றோ இராமலிங்க வள்ளலாரையும்,
தேரூரும் திருவாரூர்த்
தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை
அயன்மாலும் அளப்பரிதே
என்று குறிப்பிடச் செய்தது?
சேக்கிழார்
மொழிகளில் பொருட் சிறப்புப் பொருந்தியிருக்கும். சுந்தரர் வரலாற்றில் இறைவர் வன்தொண்ட
ரோடு வாதம் இட்டுத் தம் கோட்பாட்டை நிலை நிறுத்துகையில், நம்பி ஆரூரர் கிழவடிவில் இருந்த
இறைவரை நோக்கி, ”பழைய மன்றாடி போலும் !” என்று குறிப்பிடும் சொற்றொடரின்
பொருள் சிறப்பை என்னென்று கூறுவது ! வெளிப்படையாகப் பார்க்கும்போது தொன்று தொட்டு
விளங்கும் பொற்சபையின்கண்ணே நடனமாடும் கூத்தரசன் போலும் என்ற பொருளுடன், நீதி மன்றங்கள்
பல கண்டு அங்கெல்லாம் வழக்காடி வென்று கைவந்த பழைய ஆள் போலும் என்ற சிறப்புப் பொருளும்
அன்றோ ஈண்டுத் தொனிக்கிறது? திருநீலகண்டரது குலத்தைக் குறிக்குங்கால், அவரைக் குலாலனார் குலத்தினர்
என்றோ குயவர் குலத்தினர் என்றோ மண்வினைஞர் என்றே குறிப்பிடாமல் வேண்டுமென்றே, “வேட்
கோவர் குலத்துவந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். வேட் கோவர் குலம் என்பது குயவர் குலமே.
வேளாகிய மண்ணை வெட்டிக் கொணர்ந்து காலால் மிதித்து, பலகை கொண்டு தட்டிப் பணி புரியும் செயல்களைக்
காணும்போது, மண்ணிடத்து அவர்கள் கோபங்கொண்டு இத்தகைய செயல்களைச் செய்கின்றனரோ என்று
ஒரு சிலர் நினைக்கும் நினைவினை உணர்ந்தே குலாலரை வேட்கோவர் என்று குறிப்பிட்டார். இத்தொடர்
சேக்கிழார் தம் நுண்ணறிவால் படைத்துக்கொண்ட ஒன்று. இங்ஙனம் ஏன் படைத்து மொழிந்தார்
என்பதை நாம் சிந்திக்கும்போதுதான், அவர் அங்ஙனம் படைத்து மொழிந்த கருத்து நமக்குப்
புலனாகிறது. அதாவது வேள் என்னும் சொல்லுக்கு மண் என்னும் பொருள் இருப்பது போலவே, மன்மதன்
என்ற
|