பக்கம் எண் :

New Page 1

 

       செங்கீரைப் பருவம்

225

பொருளும் உண்டு,  அம் மன்மதனையே தம் வாழ்நாளில் முனிந்து அவன் குறும்புகள் தம்பால் அணுக ஒட்டாது அவனது செயல்களைக் கோபித்து ஒதுக்கிய காரணம் கண்டே, வேட் கோவர் குலத்து வந்தார் என்ற பொருட் சிறப்புத் தோன்றவும், குலம் இன்னது என்பதைக் குறிப்பிடவும் பாடியுள்ளார் எனில், அவரது,  “ தவாப் பொருள் சிறப்பை “  என்னென்று மொழிவது?

அவருடைய பாடல்களில் அணிச் சிறப்பு மிகுதியும் உண்டு.  சுந்தரர் திருமணத்திற்கு முன் நீராடித் தம் முடியின் ஈரத்தைப் போக்கப் பணியாள் வெள்ளிய ஆடை கொண்டு, அவரது கரிய முடியின் ஈரத்தைத் துவட்டிக்கொண்டு வரும் நிலையினைக் கூறும் சந்தர்ப்பத்தில் காட்டிய உவமை அழகை என்னென்று கூறுவது !   “ முகில்நுழை மதியம் போலக் கைவலான் முன்கை துகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி “  என்று பாடியுள்ளார்.  அதாவது நம்பியாரூரரது தலை முடியின் கருமைக்கு மேகமும், தூய வெள்ளாடைக்குச் சந்திரனும் எவ்வளவு பொருத்தம் பாருங்கள் !  மேலிருந்து வெள்ளாடை கொண்டு கருமயிரைத் துவட்டிக்கொண்டு வருவது சந்திரன் மேகத்தின் இடையே புகுந்து புகுந்து வருவது போன்றுள்ளது என்று கூறிய பொருள் அழகையும், அணிச் சிறப்பையும் காண்க.

மாதர்களின் கொங்கைகள் ஈர்க்கிடை போகா நிலையில் பருத்துத் திரண்டு இருப்பினும், பால் நிறைந்திருக்கும் என்று கூற இயலாது.  அது போலவே கொங்கை திரங்கி இருப்பினும் பால் கரந்திருக்கும் என்றும், கூற இயலாது.  ஆனால் அங்ஙனம் குடமுலையர்களும், திரங்கிய முலையர்களும் மகப்பேறுற்று, அம் மகவுகளது கரத்தால் தைவரப் பெறும் போது பால் சுரக்கும் வாய்ப்பைப் பெறுவர்.  இதனை் நன்கு அறிந்த நம் சேக்கிழார் பெருமானார், நீரற்று வெறு மணலாக இருக்கும் பாலாற்றினை வர்ணிக்கும்கால், அம் மணலாறும் மள்ளர்கள் மணல் திடரைப் பிசைந்து கையால்