வ
வருடிய அளவில் வெள்ளநீர்
வீறிட்டு வரும் என்று காட்டுதற்கு மேலே விளக்கப்ட்ட பொருளையே உவமை காட்டி,
“ பிள்ளை தைவரப்
பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின்
மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு
மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல்
பருமடை யுடைப்பது பாலி “
என்று பாடியருளினர்.
சண்டேசுவரது தந்தையினைப்பற்றிக்
கூறவந்த இடத்து அருள்மொழித்தேவர்,
பெருமை பிறங்கும்
அப்பதியில்
மறையோர்
தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு
காசிபகோத்
திரத்துத்
தலைமை சால்மரபில்
அருமை மணியும்
அளித்ததுவே
நஞ்சும்
அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும்
ஒருவடிவாம்
எச்ச
தத்தன் உளனானான்
என்று பாடியுள்ளார்.
ஈண்டுச் சண்டேசுரரைப்
பெற்றெடுத்த நல்வினையுடையன் எச்சதத்தன் ஆதலின், அருமை மணியை அளித்தது போன்ற என்ற உவமை
அழகும், அவனே சண்டேசுவரர் செய்த சிவ பூசையைக் குலைத்த காரணத்தால் நஞ்சும் அளிக்கும்
அரவுபோல் ஆயினான் என்ற உவமையினையும் கூறியிருக்கும் நிலையில் இருந்து சேக்கிழாரின் உவமைத்
திறனை உணரலாம்.
இவ்வாறு பல உதாரணங்களை
அவர் ஆளும் அணிச் சிறப்புக்கு உரியனவாக எடுத்துக் காட்டலாம்.
மறை என்பது பொது அம்மறை அவ்வம்மொழினர்கட்கு உரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தபோது, வடமொழி மறை, தென்மொழி
மறை என்று குறிப்பிடப்பட்டது. தென்
|