New Page 1
“ வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
வேந்தனும்ஓங்குக
ஆழ்க தீயதெல்
லாம் அரன்நாமமே
சூழ்க வையக மும்துயர்
தீர்கவே “
என்று பாடிய திருப்பாட்டில்
மறைந்து கிடக்கும் இரகசியப் பொருள்களை,
வேள்வி நற்பயன்
வீழ்புன லாவது
நாளும் அர்ச்சனை
நல்லுறுப் பாதலால்
ஆளும் மன்னனை
வாழ்த்திய தர்ச்சனை
மூளும் மற்றவை
காக்கும் முறைமையால்
ஆழ்க தீயதென்
றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வேறெல்லாம்
அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர்
யாவையும்
வாழி அஞ்செழுத்
தோதி வளர்கவே
சொன்ன வையக
மும்துயர் தீர்கவே
என்னும் நீர்மை
இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர்
மாற்றிட
முன்னர் ஞானசம்
பந்தர் மொழிந்தனர்
என்று வெளிப்படுத்திக்
கூறியதைக் காண்க.
இவ்வாறு சேக்கிழார்
பெருமானார் தம் நூலகத்து அரிய பெரிய குறிப்புக்களை வெள்ளிடைமலையெனப் பாடியமைத்த அருமைப் பாட்டை
வியந்தே ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் இப்பாட்டில், “ தமிழ் மறை அடங்குபல மந்தண வெள்ளிடைத்
தவிரும் வெற்பென விளங்க “ என்ற அடிகளில் சுட்டி அருளினர்.
இவற்றுடன் இப்பெரிய
புராணம் எங்கு எவர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது என்பதை அறிவிக்கையில், “ அனபாயன் மேய
அவையகம் “ என்று சுட்டி அறிவித்துள்ளனர். அனபாயன் காலத்தே இஃது அரங்கேற்றப்பட்டது என்பதைச்
சேக்கிழார் பெருமானாரும் தம் நூலகத்து,
|