பக்கம் எண் :

New Page 1

 

       செங்கீரைப் பருவம்

231

    மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
    சேய வன்திருப் பேரம் பலம்செய்ய
    தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
    ஆய சீர்அந பாயன் அரசவை

என்று குறிப்பிட்டுள்ளார்.

    இச் சோழ மன்னனுக்கு அபயன், குலோத்துங்கன் என்ற பெயர்களும் உண்டு.  இதனை “சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரே றென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமான் அனபாயன்“ என்று சண்டேசுர நாயனார் புராணத்து வரும் பாடலில் காண்க.  குலோத்துங்க சோழர் மூவர் இருந்திருக்கின்றனர்.  அவர்களுள் 1123-1148-ஆம் ஆண்டு வரை அரசு புரிந்த இரண்டாம் குலோத்துங்கனே ஈண்டு அநபாயன் எனப்பட்டான் என்பது சரித்திர ஆராய்ச்சியாளரது துணிபாகும்.  எனவே, சேக்கிழார் காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதை ஈண்டே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

        “ காலம் களனே காரணம் என்றிம்
          மூவகை ஏற்றி மொழிநரும் உளரே “ 

என்ற நூற்பாவில் கூறியபடி ஈண்டுக் காலத்தையும் களத்தையும் உணர்ந்தனம்.

    இளங்கோவடிகள்  சந்திரனைப்  போற்றும்போது,   கரிகாலனது  குடையினை உவமை காட்டி,

    “ திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
      கொங்கலர்த்தாள் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
      வங்கண் உலகளித்த லான் “ 

என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனுள் கரிகாலனது வெண் கொற்றக் குடை  “ குளிர் வெண் குடை “  என்று சிறப்பிக்கப்பட்டிருத்தலைக் காணும் போது, அம் மரபினனான அநபாயனது குடையும் அத