பக்கம் எண் :

232

             செங்கீரைப் பருவம்

தகையது  என்பார்  போன்று,   ஈண்டுப்  பிள்ளை  அவர்கள்,     “ வெப்பரிய முழுமதிக் குடைநிழற்று அநபாயன் “  என்றனர்.  சேக்கிழார் பெருமானாரும் மனுச்சோழனது குடையினை,  “ தண்ணளி வெண்குடை “  என்று கூறியுள்ளதையும் காண்க.

    “ அநபாயன் மேய அவையில் உள்ளார் மெய்ப்பாட்டினோடு பாராட்டி மகிழ “  என்று கூறியதும் இந்நூல் அரங்கேற்றப் பட்டபோது, மக்கள் கொண்ட மனநிலையின் மாண்பைப் புலப்படுத்துவதாகும்.  மெய்ப்பாடு இன்னது என்பதை,  “ உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்த வாறே, புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல் “  என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்.  இம் மெய்ப்பாடுகள் எவ்வெம் முறையில் வெளிப்படும் என்பதை ஒல்காப் பெருமையுடைய தொல்காப்பியம்,

        “ நகையே அழுகை இனிவரல் மருட்கை
          அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று
          அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப “ 

என்று கூறுகிறது.

    இத்தகைய மெய்ப்பாடுகளுள் சில மெய்ப்பாடுகளைக் காட்டி அவையினர் தொண்டர் புராணத்தைச் செவிமடுத்த காரணத்தைக் கொண்டே ஈண்டு,  “ மெய்ப் பாட்டினொடு பாராட்டி மகிழ “  என்று கூறப்பட்டது.

    இங்ஙனம் மெய்ப்பாட்டினுடன் பாராட்டி மகிழ்ந்தனர் அவையினர் என்பதை,

மருவுதிரு முறைசேர்ப்பார் எழுதுவார் இருந்து
    வாசிப்பார் பொருளுரைப்பார் கேட்டிருப்பார் மகிழ்ந்து
சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகலிப்பர் சிரிப்பார்
    தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த