இங
இங்கு உண்டு. இதனைச்
சேக்கிழாரின் இளவலான பாலறாவாயர் எடுத்ததாகக் கூறுவர். இதனை வற்புறுத்தும் நிலையில் அக்குளம்,
‘ பாலறாவாயர் குளம் ‘ என்ற பெயரால் வழங்கப்பட்டு வருவதோடு, அப்பெயருடைய கல் ஒன்றையும்
கரையில் பெற்றுத் திகழ்கிறது. முருகப் பெருமான் கோவில் ஒன்றும் சிறு குன்றில் திகழ்ந்து
கொண்டிருக்கிறது. இன்னோரன்ன சிறப்பு இக்குன்றையம்பதி பெற்றிருத்தலின், “ செப்பரிய
குன்றையம்பதி “ என்றனர்.
(14)
4. தாயவொளி
இருள்தபுபொன் மாளிகைத் தில்லைச்
சபாநடன நாதர்பெத்தான்
சாம்பானை உய்த்தனம்
நிருவாண தீக்கையால்
தகுமுத்தி
அடைவிஎன்றே
ஆயதிரு முகம்உய்த்
திடப்பெற்ற கைலாய
அம்பரம்
பரையில்அளவா
அருளுருவ மாய்அவ
தரித்திட்ட மெய்ஞ்ஞான
அற்புத உமாபதிசிவன்
நேயமிக இம்மைக்கும்
மறுமைக்கும் ஆதார
நிலயதீ தென்றுணர்ந்து
நினதுவர
லாறருமை பாராட்டி அருள்செய
நிரம்புமான்
மியமடைந்தாய்
தேயநிகழ்
குன்றையம் பதியருள் மொழித்தேவ
செங்கீரை
யாடியருளே
திருத்தொண்டை
நன்னாட்டு வேளாளர் குலதிலக
செங்கீரை
யாடியருளே.
[அ. சொ.]
தாய-பரவிய, தபு-ஒழிக்கும், கெடுக்கும், பெத்தான் சாம்பான்-பெத்தான் சாம்பான் என்னும் ஆதி
திராவிடன் ஒருவன், உய்த்தனம்-உன்னிடம் அனுப்பியுள்ளோம். நிருவாண தீட்சை என்பது தீட்சை
வகைகளுள் ஒன்று. தீட்சை என்பதன் பொருள் மலத்தைக் கெடுத்து
|