பக்கம் எண் :

New Page 1

 

       தாலப் பருவம்

291

    முத்த மாலை முப்புரி மூரிமா மணிக்கத
    வொத்த நான்கு கோபுர மோங்கிநின் றொளிர்வன
    சத்தி நெற்றி சூட்டிய தாமநீண் மணிவணன்
    தத்தொளி மணிம்முடித் தாம நால்வ போலுமே

என்று கூறுகிறது.

    இத்தகைய சிறப்புடையது குன்றத்தூர் என்பார் போல, “முரிவில் வயிரக்கால் யாத்த முழு மாளிகை” என்று பாடினர்.

    இந்த அழகிய கருத்துக்களையே இப் பாடலில் முன்னள் உள்ள அடிகள் அறிவித்து நிற்கின்றன.  குன்றத்தூர் எல்லா வளன்களும் ஒருசேரப் பெற்றிருப்பதால் சரிவில் வளம்சால் குன்றத்தூர் எனப்பட்டது.  நாவலராம் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் குன்றத்தூரைப் பற்றிப் புகழும் போது,

    பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
        பாளைவிரி மணம்கமழ்பூஞ் சோலை தோறும்
    காலாறு கோலிஇசை பாட நீடும்
        களிமயில்நின் றாடும்இயல் தெண்டை நாட்டுள்
    நாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்
        நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
    சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
        சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே

என்று பாடியருளினர்.

    இங்ஙனம் இம்மாபெரும் புலவரே குன்றத்தூர் வளத்தின் சிறப்பை இவ்வாறு பாடினர் என்றால், பிற புலவர் அதனை எம்முறையில் பாடுவர் என்று கூறவேண்டா அன்றோ? இக்காரணம் பற்றியே “எந்நாவலரும் கொண்டாடச் சரிவில் வளம்சால் குன்றத்தூர்” என்று கூறப்பட்டது.

    வைரத்தின் பண்பு ஐந்து என்பர்.  அவை,

    “பலகை எட்டும் கோணம் ஆறும்
     இலகிய தாரையும் சுத்தியும் தராசமும்
     ஐந்தும் குணம்என்று அறைந்தனர் புலவர்
     இந்திரசாபத்து இலகொளி பெறினே” என்பன,