பக்கம் எண் :

New Page 1

292

       தாலப் பருவம்

 

    குற்றங்கள் பன்னிரண்டாகும்.  அவைகள்,

    சரைமலம் கீற்று சப்படி பிளத்தல்
    துளைகரி விந்து காக பாதம்
    இருத்துக் கோடிகள் இலாதன முரிதல்
    தாரை மழுங்கல் தன்னோடு
    ஈராறும் வயிரத்து இழிபென மொழிப

என்பன.

    இங்ஙனம் குணங்களைப் பெற்றும், குற்றங்கள் இன்றியும் உள்ள வைரங்களை உளத்தில் கொண்டே ஆசிரியர், “முரிவில் வைரம்” என்றனர்        

(25)

5.     சோறு மணக்கும் மடங்கள்எலாம்
           தூய்மை மணக்கும் சிந்தைஎலாம்
       சுவணம் மணக்கும் ஆடைஎலாம்
           தொங்கல் மணக்கும் தோள்கள்எலாம்
       சேறு மணக்கும் கழனியெலாம்
           செல்வம் மணக்கும் மாடமெலாம்
       தென்றல் மணக்கும் மேடைஎலாம்
           தெய்வம் மணக்கும் செய்யுள்எலாம்
       நீறு மணக்கும் நெற்றியெலாம்
           நெய்யே மணக்கும் கறிகள்எலாம்
       நெறுப்பு மணக்கும் குண்டமெலாம்
           நேயம் மணக்கும் வீதிஎலாம்
       சாறு மணக்கும் குன்றத்தூர்
           தலைவா தாலோ தாலேலோ
       சகலா கமபண் டிததெய்வச்
           சைவா தாலோ தாலேலோ

    [ அ, சொ.  ]  மணக்கும்-விளங்கும், மணம்வீசும் ;  மடம்-அறச்சாலை தூய்மை-பரிசுத்தமான குணம், சிந்தை-