மனம
மனம், சுவணம்-பொன்மயம்,
மணத்தல்-பொருந்துதல், கூடுதல்-கலத்தல், நேர்தல் ; தொங்கல்-மாலை, மாடம்- மாளிகை. தென்றல்-தென்றல்காற்று,
குண்டம்-ஓமகுண்டம். நேயர்-அன்பு, சாறு-விழாக்கள், தெய்வம்- தெய்வத்தன்மை.
விளக்கம் :
பொதுவாக மடங்கள் உணவுக்குக் குறைவற்ற இடங்கள். எப்போது செல்லினும், சோறளிக்கும்
பெருமை படைத்தவை. இவற்றை நேரே காணவிழைவார் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள்,
மதுரை, திருமைலம் முதலான மடங்களுக்குச்சென்று கண்டு தெளியலாம். உண்டும் உண்மைகளை உணரலாம்.
இதனை மனத்துள் கொண்டே திரு பிள்ளை யவர்கள் சோறுமணக்கும் மடங்கள் எலாம் எனப் பொதுப்படவே
கூறியருளினர். திருப்பனந்தாள் திருமடத்தார் இன்றும் குன்றத்தூரில் சோறளித்து வருகின்றனர்.
சேக்கிழார் மடமும் சோறளித்து வருகிறது. குன்றத்தூர் வாசிகள் கள்ளம் கபட மற்றவர் என்பதை
அவர்கள் மனம் தூய்மையாக இருக்கும் என்று கூறி விளக்கினர். ‘மனத்தின் கண் மாசிலனாதல் அன்றோ
அறம்? அவ்வூரின் செல்வச்சிறப்பை அவ்வூரினர் அணியும் பொன்னாடை கொண்டு விளக்கினர். இப்படியே
அவ்வூரின் பல சிறப்பியல்பைக் கவிஞர் பாடலால் கூறினர். “அகல உழுவதிலும் ஆழ உழு” என்பது
பழமொழி. அங்ஙனம் உழுவதால் மண் நன்கு கிளறப்படும். அந்நிலையில் நீரைப் பாய்ச்சினால்
சேறுஆகும். இதனை இவ்வூர் உழவர்கள் செய்பவர்கள். நெய்யில்லா உண்டிப்பாழ் என்பதை நினைவில்
கொண்ட குன்றத்தூர் வாசிகள், தாம் சமைக்கும் கறிவகைகளில் நெய்விட்டுச் சமைத்தனர் என்பதை
“நெய்யே மணக்கும் கறிகளெலாம்” என்று கூறி அறிவித்தார்.
ஊருக்கு வறுமை வராமல்
இருப்பதற்கு உரிய காலங்களில் யாகம் முதலிய வைதிக காரியங்களைச் செய்து வருவதனால் என்னலாம்.
இதனை அழகுபட நமது ஞானச்
|