New Page 1
செல்வராம் திருஞானசம்பந்த
சுவாமிகள் “கற்றாங்கு எரி ஒம்பி, கலியை வாராமலே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம்”
என்று எரிஓம்பலைச் சுட்டியதன் மூலம் உணரலாம். பழம் பாடல் ஒன்று இந்த எரிஓம்பல் சிறப்பினை
எடுத்துக் காட்டுகிறது. அப்பாடல்,
நல்லம்பர் நல்ல
குடியுடைத்துச் சித்தன்வாழ்வு
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து
- நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன்
வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல
தமிழ்
என்பது, இந்த எரிஓம்பல்
குன்றத்தூரில் தடைபடாது நடந்து வந்தது என்பதை உணர்த்த “நெருப்பு மணக்கும் குண்டமெலாம்” என்று
கூறினர். நெருப்பாவது ஓமத்தீ, வேதாக்கினி. குன்றத்தூர் வாசிகள் அன்பு நிறைந்த உள்ளத்தினர்.
அவர்கள் தம் இல்லம் நோக்கி வந்தவரிடத்தில் மட்டும் அவ் அன்பைக் காட்டக் கூடியவர் என்பதன்றித்
தெருவிலும் அவரைக் காணும்தோறும் அவ்வண்ணம் காட்டும் இயல்பினராய்த் திகழ்பவர் என்பதைத் தான்
“நேயம் மணக்கும் வீதி எலாம்” என்று கூறியுள்ளார். இவ்வூர் திருவிழாச் சிறப்புக்கும் குறைவற்றது
என்பதும் தெரியவருகிறது. “சாறுமணக்கும் குன்றத்தூர்” என்ற தொடரே இதற்குப் போதுமான
சான்றாகும்.
நேயம் மிக்கவராய்
அங்கு வருபவரை மெய்யன்பர்கள் நல்வரவு கூறி நன்மொழியே பேசி உபசரிப்பதை இன்றும் காணலாம்.
திருநாகேச்சரத்தும் நத்தத்தும் திருவிழாக்கள் இன்றும் நடப்பதை நேரில் காணலாம்.
இப்பாடலில் மணக்கும்
என்னும் சொல் பல பொருளில் ஆளப்பட்டிருத்தலின், இது சொல் பொருள் பின், வருநிலை அணிக்கு
எடுத்துக் காட்டாகும்.
(26)
|