New Page 1
சேக்கிழார் அடியாரிடத்தில்
அன்பும், அடக்கமும் கொண்டு திகழ்ந்தவர் என்பதை,
அளவி லாத
பெருமையர் ஆகிய
அளவி லாஅடி
யார்புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரி
தாயினும்
அளவில் ஆசை துரப்ப
அறைகுவேன்
தெரிவ ரும்பெரு மைத்திருத்
தொண்டர்தம்
பொருவ ருஞ்சீர்
புகலலுற் றேன்முற்றப்
பெருகு தெண்கடல் உற்றுண்
பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்கும்த
கைமையேன்
என்று அவர் பாடியுள்ள
பாக்களால் நன்கு தெளியலாம். இது கருதியே, ஈண்டு, “ அன்பு அத்தனையும் கண் காண்படி செய்து”
என்றனர்.
தமிழ் ஒன்றே
மொழி என்னும் சிறப்புக்குரியது. ஏனையவை பாடை என்ற பெயரால் வழங்குதற்குரியவை. ஆதலின்,
இதனைச் சீகாளத்திப் புராணம் நன்கு தெளிவுபடுத்தியுள்ளது.
மறைமுதல்
கிளந்த வாயான்
மதிமுகிழ்
முடித்த வேணி
இறைவர்தம்
பெயரை நாட்டி
இலக்கணம்
செய்யப் பெற்றே
அறைகடல்
வரைப்பில் பாடை
அனைத்தும்வென்
றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்
வத்தை
உள்நினைந்
தேத்தல் செய்வம்
என்பது அந்நூற்பாடல்.
இதனால்தான்
“எப்பாடைக்கு உள்ளது” என்றனர்.
சேக்கிழார்
பெருமானார் திருத்தொண்டர் புராணம் செய்தது நாம் செய்த பாக்கியப்பயனே என்பதை நன்கு உணர்ந்து
சிவஞான முனிவர்,
|