தூக
தூக்கு சீர்த்திருத்
தொண்டத் தொகைவகை
வாக்கி
னால்சொல்ல வல்லபிரான் எங்கள்
பாக்கி யப்பய
னாய்ப்பதி குன்றைவாழ்
சேக்கி ழான்அடி சிந்தை
இருத்துவாம்
என்று அருளிப் போந்தனர்.
இதனால் அன்றோ ஈண்டு “இப்பாக்கியம் நம் தவம்” என்று ஆசிரியரைக் கூறச் செய்தது.
இவ்வாறு இறைவர் அடி
எடுத்துக் கொடுக்க நூல் தொடங்கிப் பாடப்பட்ட பெருமை எந்த மொழியும் பெற்றிராமையால், ஈண்டுத்
திரு பிள்ளை அவர்கள் “ இப்படி யார் பெற்றார் தமிழ் மான்மியம் எப்பாடைகளுக்குரியது” என்று
அறிவித்தனர். ஆளுடை நம்பிகட்கும் இறைவர் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்”
எனும் அடி எடுத்துக் கொடுத்துள்ளார் எனில், நம்பி ஆரூரர் ஆசாரியமூர்த்தி ஆவார். கச்சியப்ப
சிவாசாரியார்க்கு முருகப் பெருமானார் “திகட சக்கரம்” என்ற தொடரை எடுத்து மொழிந்தார் எனில்,
அவர், புலவர் குழாத்தவர் அல்லர் ; அவர் அர்ச்சகர். புலவர்கள் எவரும் இப்பெருமையினைப் பெறாமையால்
“ யார் பெற்றார்?” என்றனர்.
இப்பாடலில் ‘தடி’
என்னும் சொல் அருஞ்சொல் ஆகும். அது தனித்தனியே நின்று வெவ்வேறு பொருளில் வருமாறு பரடப்பட்ட
அருமை ஆசிரியரைச் சாரும். நாட்டின் செழிப்பு அதன்பால் விளையும் விளைச்சலால் புலனாகும்.
ஈண்டுக் கரும்புகள் விளையும் வயல்கள் என்று கூறப்பட்டிருத்தலால், குன்றத்தூரின் சிறப்பு
விளங்குகிறது. சேக்கிழார் பெருமானார் புலவர்போலக் காட்சி அளிப்பவர் மட்டும் அல்லர்.
ஒரு பெரிய முனிவர் போலவும் காட்சி அளிப்பவர். அனபாய சோழன் சோழநாட்டுச் சக்கரவர்த்தி.
அவனைப் பிறர் வணங்க வேண்டுமே அன்றி, அவன் பிறரை வணங்காதவன். அத்தகையவனும் சேக்கிழாரின்
திருமேனி கண்டு, கைகள் மேலே எடுத்துச் சிரமேற் கொண்டு வணங்கிப் போற்றினன் என்றால், அதற்குக்
காரணம் அவரது திருமுனிக் கோலமே
|