பக்கம் எண் :

 

       தாலப் பருவம்

309

 

யாகும்.  அநபாயன் சேக்கிழாரது திருமுனி வேடத்தில் ஈடுபட்டு,

        தொண்டர் சீர்பரவு வார்எ னப்பெயர்
            சுமத்தி ஞானமுடி சூட்டுமுன்
        மண்ட பத்தினில் இருத்தி மற்றவரை
            வளவர் பூபதி வணங்கினான்

என்பர் சேக்கிழார் புராண ஆசிரியர்.

    சேக்கிழார் பெருமானார் சைவ சமயத்தின் மேன்மையினைப் பல்வேறு இடங்களில் பண்புடன் பாடி அமைந்துள்ளார்.  “அருமறைச் சைவம் ஓங்குக” “சைவமெய்த்திருவின் கோலம், “ஆரம் கண்டிகை, அடையும் கந்தையே, பாரம் ஈசன் பணியலாது ஒன்றிலார்” என்பன போன்ற தொடர்களைப் பார்க்கும்போது, சேக்கிழார் பெருமானார் சைவப் பயிர் வளர்தற்கான முகிலாக இருந்தார் என்பது நன்கு பெறப்படுகிறது.

    சேக்கிழார் வாக்கு எங்கும் சைவ மணம் கமழும் முறையிலேயே அமைந்திருக்கும்.  இதனைப் பல்வேறு இடங்களில் காணலாம்.  ஆற்றைப்பற்றிக் குறிப்பிடும்பேது,  “அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி, உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம்போன்றது” என்றும்,

    வம்பு லாம்மலர் நீரால் வழிபட்டுச்
    செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
    எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
    உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்

என்றும்,

    நெற்கதிர்கள் அலர்ந்து வளர்ந்திருந்த நிலையினைக் கூறும் போதும், “அரனுக்கு அன்பர் ஆலின் சிந்தைபோல அலர்ந்தன கதிர்களெல்லாம்.” என்றும், அக்கதிர்கள் நன்கு முதிர்ந்து தலை சாய்ந்து நின்ற நிலையினைக் குறிப்பிடும்போது,