ஒத
ஒத்தது அவ்வெள்ளமே”
என்றும், அகழினைப் பற்றிக் குறிப்பிடுகையில் “கன்னியர் அல்குல்தடம் என யார்க்கும் படி
வரும் காப்பினதாகி” என்றும், சீதை தனது கொங்கைகளை நோக்கிக் கூறியதாகக் குறிப்பிடுகையில்,
இளைக்க லாத
கொங்கைகாள்
எழுந்து
விம்பி என்செய்தீர்
முளைக்கலா
மதிக்கொழுந்து
போலும்
வான்மு கத்தினான்
வளைக்க லாத
விற்கையாளி
வள்ளல்
மார்பில் உள்ளுறத்
திளைக்க
லாகும் ஆகிலான
செய்த
வங்கள் செய்ம்மினே
என்றும்,
இராமன் அனுமானிடம்
சீதையின் அல்குலைப் பற்றிக் கூறியதாகக் கம்பர் கூறுகையில்,
வாராழிக் கலசக்கொங்கை வஞ்சிபோல்
மருங்கு
லாள்தன்
தாராழிக்
கலைசார் அல்குல்
தடம்கடற்
குவமை தக்கோய்
பாராழி பிடரில்
தாங்கும் பாந்தளும்
பனிவென
றோங்கும்
ஓராழித்
தேரும் கண்ட
உனக்குநான்
உரைப்ப தென்னோ
என்றும் பாடி இருக்கும்
கவிகளைக் காணலாம். இங்ஙனம் பல கவிகளை எடுத்துக் காட்டலாம். இத்தகைய காமச் சுவை ததும்பும்
பாக்களை இத்தனை வெளிப்படையாகச் சேக்கிழார் வாக்கில் காண இயலாது.
(28)
|