பக்கம் எண் :

8

312

             தாலப் பருவம்

8.     பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப்
           பாடிய கவிவலவ
       பயனில தாகும் சிந்தா மணிவழி
           படர்தல் எனப்போகித்
       துத்திச் சுமையொரு தோள்வைத் திடுபுல்
           உயர்த்தோன் மனம்அடியார்
       உறுசெயல் நாடப் புரிமதி வலவ
           ஒலாஅரு கந்தர்திறம்
       முத்தித் திறம்அல என்றள விலர்பால்
           முற்றிச் சிவமடைய
       முயல்செயல் வலவ வயல்கண் மடைச்செறி
           முத்தம் அனைத்தினையும்
       தத்திப் புனல்பாய் குன்றைத் திருமுனி
           தாலோ தாலேலோ
       சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
           தாலோ தாலேலோ

    [அ. சொ.]  நனி-மிகுதியும், கவிவலவ-கவியில் வல்லவரே, சிந்தாமணி-ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய நூல், படர்தல்-செல்லுதல் உத்தி-படத்தையுடைய ஆதி சேடன், புல்-புலிக் கொடி, உயர்த்தோன்-பிடித்தவனாகிய சோழன், உறு-பெரிய, புரி-செய்த, மதிவலவ-அறிவில் வல்லவரே, ஒலா-கூடாத, அருகந்தர்-சமணர், திறம்-வழி, முத்தி-மோட்சம், அளவிலர்பால்-அளவில்லாத பல்லோர் முற்றி-நல்வினை முற்றி, சிவம்-முத்தி, செறி-மிகுந்த, புனல்-நீர்.

    விளக்கம் :  பெரிய புராணத்தில் பக்திச் சுவை அமைந்த கவிகள் பல்கியுள்ளன என்பதைக் கூறவேண்டா.  நூல் முழுமையும் பக்திச் சுவை மலிந்தே காணப்படும்.  இந்தப் பக்திச் சுவை அமைந்த கவிகளை அடியார்களின் வரலாற்றில் தான் சேக்கிழார் அமைத்துப் பாடியுள்ளார் என்றும் கூற இயலாது.  இயற்கை நிகழ்ச்சியிலும் இந்தப் பக்திச் சுவை