பக்கம் எண் :

பசுவ

324

             தாலப் பருவம்

Sபசுவின் துயருக்குக் காரணம் என்ன என்று வினவியபோது அமைச்சன்,

        வளவநின் புதல்வன் ஆங்கோர்
            மணிநெடுந் தேர்மேல் ஏறி
        அளவில்தேர்த் தானைசூழ அரசுலாம்
            தெருவில் போங்கால்
        இளையஆன் கன்று தேர்க்கால்
            இடைப்புகுந் திறந்த தாகத்
        தளர்வுறும் இத்தாய் வந்து
            விளைத்ததித் தன்மை என்றான்.

இப்பாடலில், ஆழமுடைய பொருள்கள் பொருந்தியுள்ளன.  “இந்த நிகழ்ச்சிக்குக் காரணன் எவனோ அல்லன் ;  உன் மகனே ஆவான் என்பதை, நின்புதல்வன் என்றும், நடந்து செல்லாமல், மேலே ஏறிச் சென்றதனால் கீழை நடப்பதை அறிதற்கு வாய்ப்பு இல்லை என்பதைத் தேர் மேல் ஏறி என்றும், தேரும் மணி ஓசையுடன் வருவதால், அவ்வோசை கேட்டு ஒதுங்க வேண்டியது கன்றின் கடமையாகும் என்பதை மணி நெடுந்தேர் என்றும், உன் மகன் தன்னந் தனியனாகச் செல்லாது படைசூழ நெருக்கமாகவே சென்றான் என்பதைத் தானைசூழ என்றும், அவன் சென்ற வீதி குறுகலான வீதி அன்று, மிகப் பெரிய ராஜ வீதியே ஆகும் என்பதை அரசுலாம் தெரு என்றும் இளங்கன்று பயம் அறியாது என்பதனால்தான் பசுவின் கன்று அகப்பட்டுக் கொண்டது என்பதை இளைய ஆன் கன்று என்றும், உணரும் வகையில் பொருள் ஆழமுடைய சொற்களை அமைத்து, இவை அனைத்திற்கும் காரணம்தெய்வ சங்கற்பமே அன்றி, உன் மகனால் ஏற்பட்டது அன்று என்பதும் மன்னன் உணரும் வகையில் மந்திரியின் வாயில் வைத்துப் பேசியதன் மூலம் ஆழமுடைய பொருள் அழகு பொருந்தச் சேக்கிழார் பாடியுள்ளார் என அறியலாம்.

    சீர்காழிக்குரிய பெயர்கள் பன்னிரண்டு.  அப்பெயர்களைத் திருஞானசம்பந்தர் தம் திருவாக்கில்,