ப
பிரமனூர் வேணுபுரம் புகலி
வெங்குருப்
பெருநீர்த் தோணி
புரமன்னு
பூந்தராய் பொன்னம்
சிரபுரம் புறவம் சண்பை
அரன்மன்னு
தண்காழி கொச்சைவயம்
உள்ளிட்டங்
காதி யாய
பரமனூர்
பன்னிரண்டாய் நின்றதிருக்
கழுமலம்
நாம்பரவும் ஊரே
என்று பாடிக் காட்டினர்.
இந்த வைப்புமுறை
சிறிதும் வழுவாத முறையி்ல் சேக்கிழார் பெருமானாரும் தம் திருவாக்கில்,
பிரமபுரம் வேணுபுரம்
பெரும்புகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரம்முன்
வருபுறவம் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப்பெயர்த்தாய்
என்று முறையின் வைப்பு
என்ற வனப்பு அமையப் பாடிக் காட்டினர்.
அப்பூதி அடிகளார்
அந்தணர். ஆளுடைய அடிகளார் வேளாளர். இத்தகைய இருவேறு பட்ட மரபினர்களுள் அந்தணராம் அப்பூதியார்
வேளாளராம் அப்பர் பெருமானாரை எப்படிப் பூசித்தார் என்பதைத் தெள்ளத் தெளிய உணர்த்த வந்த
சேக்கிழார் பெருமானார்
மனைவியார் உடன்மக்கள்
மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டிறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரையுள் எழுந்தருளு
வித்தவர்தாட் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்
என்று அறிவித்தார்,
இப்பாடலைப் படிக்கும்போது
உலகமலையாத நிலையில் பாடல் அமைந்ததையும் நன்கு காணலாம்,
|