பக்கம் எண் :

New Page 1

328

             தாலப் பருவம்

    “பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப”

    “வைகுறு விடியல் மருதம்;ஏற்பாடு
     நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்”

    “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
     முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”

    “பின்பனி தானும் உரித்தென மொழிப”

என்ற நூற்பாக்கள் மூலம் அவ்வந்நிலங்களுக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுதுகளைச் சுட்டியுள்ளமை காண்க.

    பெரும்பொழு தென்றா சிறுபொழு தென்றா
    இரண்டு கூற்ற தியம்பிய பொழுதே

என்று இலக்கண விளக்கம் எடுத்துப் பேசுவதையும் காண்க, பெரும்பொழுது இன்ன, சிறுபொழுது இன்ன என்பதையும்.  பெரும்பொழுது இந்தத் திங்களுக்கு உரியவை என்பதையும் சிறுபொழுதுகள் ஒருநாளில் இத்தனை நாழிகைக்குட்பட்டவை என்பதையும் கீழ்வரும் இலக்கண விளக்க நூல் எடுத்துக் காட்டுவதையும் அறிதல் நல்லதே.

    “காரே கூதிர் முன்பனி பின்பனி
     சீரிள வேனில் வேனில் என்றாங்
     கிருமூன்று திறத்தது பெரும்பொழு தவைதாம்
     ஆவணி முதலா இரண்டிரண் டாக
     ஆடி இறுதிய ஆயும் காலே”

    “மாலை யாமம் வைகுறு என்றா
     காலை நண்பகல் ஏற்பா டென்றா
     அறுவகைத் தென்ப சிறுபொழு தவைதாம்
     படுசுடர் அமையத் தொடங்கி ஐயிரு
     கடிகை அளவைய காணும் காலே”

என்பன அச்சூத்திரங்கள்.

    கருப்பொருளாவன அவ்வந் நிலங்கட்குரிய தெய்வம், உணவு, மா, மரம், புள், பாறை, தொழில் முதலியனவாகும்.  இதனையே தொல்காப்பியம்,