என
என்னும் இப்பாடலின்
அடிகளை எங்கு வைத்துப் பொருள் கொள்ளினும் பொருள் தந்து நிற்றலைக் காண்க. ஆகவே, இஃது
அடிமறி மாற்றுப் பொருள் கோளுக்கு ஏற்ற உதாரணமாகும்.
“மற்றவை” என்னும்
தொடர்க்குப் பொருள், எண்வகைப் பொருள்கோள்களே அன்றி, “பா வகைகளும், சந்தங்களும் ஆகிய மற்றைய சிறப்புக்களும்” என்று
பொருள் காணவேண்டி இருக்கிறது. பா வகைகளும், சந்தங்களும் பெரிய
புராணத்தில் நிரம்பியுள்ளன என்பதில் ஒரு சிறிதும் ஐயம் இல்லை.
பா வகைகளுக்குச்
சில எடுத்துக்காட்டுகளை முதற்கண் காண்போமாக.
மதிவளர் சடைமுடி மன்று
ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார்
தூய சொல்மலர்
பொதிநலன் நுகர்தரு
புனிதர் பேரவை
விதிமுறை உலகினில்
விளங்கி வெல்கவே
என்பது கலி விருத்தம்.
செங்குவளை பறித்தணிவார்
கருங்குழல்மேல்
சிறைவண்டை
அங்கைமலர் களைக்கொடுகைத்
தயல்வண்டும்
வரவழைப்பார்
திங்கள் நுதல் வெயர்வரும்பச்
சிறுமுறுவல்
தளவரும்பப்
பொங்குமலர்க்
கமலத்தின்
புதுமதுவாய் மடுத்தயர்வார்
என்பது தரவு கொச்சகம்.
சங்கையும் மதியும்
பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி
ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதிஇரு
மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும்
திருமுனைப் பாடி நாடு
என்பது அறுசீர்க்கழி நெடிலடி
ஆசிரிய விருத்தம்.
|