பக்கம் எண் :

இன

340

             தாலப் பருவம்

    இனிச் சேக்கிழார் நூலில் அமைந்த சந்தங்களுக்குச் சில உதாரணங்களை உணர்வோமாக.

        மங்கல வினைகள் எங்கும்
            மணம்செய் கம்பலைகள் எங்கும்
        பங்கய வதனம் எங்கும்
            பண்களின் மழலை எங்கும்
        பொங்கொளிக் கலன்கள் எங்கும்
            புதுமலர்ப் பந்தர் எங்கும்
        செங்கயல் பழனம் எங்கும்
            திருமகள் உறையுள் எங்கும்

என்பதையும்,

    பண்டிசரி கோவண உடைப்பழமை கூறக்
    கொண்டதொர் சழங்கலுடை ஆர்ந்தழகு கொள்ள
    வெண்துகில் உடன்குசை முடிந்துவிடு வேணுத்
    தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடை கொள்ள

என்பதையும்,

        மொறையால்வரு மதுரத்துடன்
            மொழிஇந்தள முதலில்
        குறையாநிலை மும்மைப்படி
            கூடும்கிழ மையினால்
        நிறைபாணியின் இசைகோள்புணர்
            நீடும்புகழ் வகையால்
        இறையான்மகிழ் இசைபாடினன்
            எல்லாம்நிகர் இல்லான்

என்பதையும்,

    புலரும் படியன் றிரவென் றளவும்
        பொறையும் நிறையும் இறையும் தரியா
    உலரும் தனமும் மனமும் வினையேன்
        ஒருவென் அளவோ பெருவாழ் உரையீர்