பக்கம் எண் :

New Page 1

342

             தாலப் பருவம்

    பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
        பொறையில்சமண் நீசர் புறத்துறையாம்
    அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா
        றறியாது மயங்கி அவம்புரிவேன்
    மைவாச நறுங்குழல் மாமலையாள்
        மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
    இவ்வாழ்வு பெறத்தருச் சூலையினுக்
        கெதிர்செய்குறை என்கொல் எனத்தொழுதார்

என்பதையும்,

        மாதர்ப் பிறைக்கண்ணி யானை
            மலையான் மகளொடும் என்னும்
        கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
            குலவு திருப்பதி கங்கள்
        வேத முதல்வர்ஐ யாற்றில்
            விரவும் சாராசரம் எல்லாம்
        காதல் துணையொடும் கூடக்
            கண்டேன் எனப்பாடி நின்றார்

என்பதையும்,

        கயமொடு கயமெதிர் குத்தின
        அயமுடன் அயமுனை முட்டின
        வயவரும் வயவரு முற்றனர்
        வியனமர் வியலிட மிக்கதே

என்பதையும் பாடிப் பாருங்கள்.    அது   போது   சந்தங்களின்   இன்பத்தை   நன்கு துய்ப்பீர்கள்!                                                

(30)