பக்கம் எண் :

10

 

       தாலப் பருவம்

343

10.      மண்டலை வேலைப் புவிவில் பத்திசெய்
            மார்க்கம் அறிந்தவர்ஆர்
        வண்சுவை அமுத ஒழுக்கென வார்த்தை
            வழங்கத் தெரிகுநர்ஆர்
        கொண்டலை நேர்பக டூர்தரு கூற்றம்
            குதித்துய்ந் திடவலர்யார்
        கொற்றக் கைலைக் கணநா தர்களொடு
            கூடுபு மகிழ்பவர்ஆர்
        விண்டலை யாரும் பெறல்அரும் இன்பம்
            விராவும் திறலினர்ஆர்
        விமலா நீஅவ தாரம் செய்யா
            விடின்என மேயவபைந்
        தண்டலை சூழும் குன்றைத் திருமுனி
            தாலோ தாலேலோ
        சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
            தாலோ தாலேலோ    

    [அ. சொ.] மண்டு-மிகுந்த, நெருங்கிய, தொடர்ந்து வருகின்ற வேலை-கடல், மார்க்கம்-வழி, வண்சுலை- வளமான சுவை, கொண்டல்-மேகம், நேர்-ஒத்த, பகடு-எருமைக்கடா, ஊர்தரு-ஏறி நடத்தும், கூற்றம்-இயமன், குதித்து-வென்று, கடந்து, தப்பி உய்த்திட-பிழைத்திட-வலர்-வல்லவர், கொற்றம்-வெற்றியுடைய, கூடுபு சேர்ந்து, விண்தலையார்-தேவலோகத்தில் உள்ளவர்களும் பெறல் அரும்-பெறுதற்கரிய,விராவும்-சேரும், திறலினர்’ வன்மையுடையவர், விமலா-குற்றமற்ற சேக்கிழார் பெருமானே, மேயவ-பொருந்தியவரே, பைந்தண்டலை-பசுமையான சோலை.

    விளக்கம்:  உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது என்பதைக் கவிஞர் கூறல் மரபு.  “வாராரும் கடல் புடைசூழ் வையம்” என்பர் உமாபதி சிவம்.  “நீராரும் கடல் உடுத்த