பக்கம் எண் :

344

             தாலப் பருவம்

நிலமகள்” என்பது மனோன்மணியம்.  ஆகவே, ‘மண்டலை வேலைப்புவி” என்றனர்.  பத்தி மார்க்கத்தை நிலைநாட்டச் சேக்கிழார் அமைத்துள்ள கவிகள் பற்பல.  இப்பகுதி இருபாலாகி இயலும்.  ஒன்று ஆண்டவனிடத்தில் காட்டும் பக்தி; மற்றொன்று அடியார் இடத்தில் காட்டும் பக்தி.  இறைவனிடத்தில் பக்தி எழுமாறு செய்யும் முறையில் பாடியுள்ள கவிகளில் ஒன்று,

        கையும் தலைமிசை புனைஅஞ் சலியன
            கண்ணும் பொழிமழை ஒழியாதே
        பெய்யும் தகையன கரணங் களுடன்
            உருகும் பரிவின பேறெய்தும்
        பெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரு
            மின்தாழ் சடையொடு நின்றாடும் 
        ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்
            ஆர்வம் பெருகுதல் அளவின்றால்

என்பது. அடியார் பக்தியின் நிலையைக் கூறும் பாடல்களுள் ஒன்று,

        மழையில் கரைந்தங் குவர்ஊறி
            மேனி வெளுத்த வடிவினால்
        உழையில் பொலிந்த திருக்கரத்தார்
            அடியார் வேடம்என் றுணர்ந்தே
        இழையில் சிறந்த ஓடைநுதல்
            யானைக் கழுத்தின் நின்றிழிந்து
        விழைவில் பெருகும் காதலினால்
            விரைந்து சென்று கைதொழுதார்

என்பது.  இதில் சேரர் பெருமானார் அரசராக இருந்தும், சிவனடியார் என வண்ணானை எண்ணி வணங்கியதைக் காண்க.  இவ்வாறு பக்திமார்க்கநிலையினை இத்துணை அழகுற அறிந்து உணர்த்தியவர் நம் சேக்கிழார் அல்லரோ?

    திண்ணனார் இறைவர்க்கு இறைச்சியினை ஊட்டும் நிலையினைப் பாடவந்த சேக்கிழார்.