பக்கம் எண் :

New Page 1

 

       தாலப் பருவம்

345

        கொழுவிய தசைகள் எல்லாம்
            கோலினில் தெரிந்து கோத்தங்
        கழலுறு பதத்தில் காய்ச்சிப்
            பல்லினால் அதுக்கி நாவில்
        பழகிய இனிமை பார்த்துப்
            படைத்தஇவ் இறைச்சி சால
        அழகிது நாயன் நீரே
            அமுதுசெய் தருளும் என்றார்

என்றும்,

ஊன் அமுது கல்லையுடன் வைத்துமுன் னையின் நன்றால்
ஏனமொடு மான்கலைகள் மரைகடமை இவையிற்றில்
ஆனஉறுப் பிறைச்சிஅமு தடியேனும் சுவைகண்டேன்
தேனும்உடன் கலந்ததிது தித்திக்கும் எனமொழிந்தார்

என்றும் பாடியுள்ள பாட்டில் “வண்சுவை அழுத ஒழுக்கென” வார்த்தைகள் வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

    இயமனது ஊர்தி எருமைக்கடா.  அதன் நிறம் கருமை.  ஆதலின், மேகத்தை உவமை கூறிக் “கொண்டலை நேர் பகடு” என்றனர்.  இவ்வாறே “கார்மாமிசைக்காலன்” என்று அருணகிரியாரும் எருமைக் கடாவிற்குக் காரை (மேகத்தினை) உவமை காட்டியுள்ளனர்.

    பெரிய புராணச் செய்யுட்களைப் பயிலும் தோறும் இயமவாதனை அற்று, இறை அன்பில் நிலைத்து இருக்கலாம்.  இதனைத் திருத்தொண்டர் புராணத்தில் வரும் அடியவர்களின் வரலாறுகளைக் கொண்டு அறியலாம்.  மெய்ப்பொருள் நாயனார் இறையடி எய்தியதைக் கூறும்போது “புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார்” என்றும், திரு நாளைப் போவாரின் முக்தி நிலையினைக் கூறும்போது, “ஒல்லை போய் உள் புகுந்தார்.  உலகுய்ய நடமாடும், எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்” என்றும், இவ்வாறு கூறிச் செல்லும் ஆற்றல் படைத்தவர் சேக்கிழார்.  ஆகவே, “கூற்றும் குதித்து உய்ந்திட” என்றனர் ஆசிரியர்.  ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள்