New Page 1
“கூற்றம் குதித்தலும்
கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்
டவர்க்கு”
என்னும் குறட்பாவினை நினைவு
படுத்தியுள்ளதை உணரவும்.
விறல்மிண்ட நாயனார்
இறையடியில் இன்புற்றிருக்கும் நிலையினைக் கூறவந்த சேக்கிழார்.
ஒக்க நெடுநாள்
இவ்வுலகில்
உயர்ந்த சைவப்
பெருந்தன்மை
தொக்க நிலைமை
நெறிபோற்றித்
தொண்டு பெற்ற
விறன்மிண்டர்
தக்க வகையால்
தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநாத
ராகும்
தன்மை பெற்று
விளங்கினார்
என்றும், எறிபத்தரது முத்தி
நிலையினை அறிவிக்கையில்,
மற்றவர் இனைய
வான
வன்பெருந் தொண்டு
மண்மேல்
உற்றிடத் தடியார்
முன்சென்
றுதவியே நாளும்
நாளும்
நற்றவக்
கொள்கை தாங்கி
நலமிகு கயிலை
வெற்பில்
கொற்றவர் கணத்தின்
முன்னால்
கோமுதல்
தலைமை பெற்றார்
என்றும் சிவகணங்களில்
அடியார்கள் திகழ்தலைப் பாடியுள்ளனர்.
மேலே காட்டிய நிகழ்ச்சிகள்
அனைத்தும் அடியார்களைப் பற்றியனவே ஆனாலும், அந்நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி இவ்வாறு எவரும்
அடைய இயலும் எனபதை நாம் யாவரும் உய்ய எடுத்து மொழிந்த பெருமை தொண்டர் சீர் பரவுவார்க்கு
உரித்தாதலின், திரு பிள்ளை அவர்கள், யார்? யார்? என்ற வினாவினை எழுப்பி உணர்த்தியுள்ளனர்,
சேக்கிழார்
பெருமானார் தமது திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்ததும், அநபாய சோழன் திருமுறை
|