க
களையும் இவரையும் யானைமீது
ஏற்றித் தான் வெண்சாமரை வீசி வீதி உலாவரச் செய்தனன். அப்போது மக்கள் பலரும் சேக்கிழாரைப்
பலவாறு போற்றினர் : வணங்கினர். அரசனும் அவரது திருவடியில் வீழ்ந்து வணங்கினன். இந் நிகழ்ச்சிகள்
அனைத்தும் ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் பாடியுள்ள பாடல்களால் நன்கு தெளியலாம், அப்பாடல்கள்,
தேவரும் எழுதஒ ணாமறை
யைத்தமிழ் செய்து
திருப்பதி கம்பாடும்
மூவரும் ஒருமுத
லாயுங் கத்து
முளைத்த முதல்பொருள்
தான்
என்பார்.
மதுரஇ ராமா
யணகதை உரைசெய்த
வான்மிக பகவனும் ஒப்பல்ல
விதிவழி பாரதம்
உரைசெய்து கரைசெய்த
வேதவி யாதனும்
ஒப்பல்ல
சிதைவற ஆயிர நாவுடன்
அறிவுள
சேட விசேடனும்
ஒப்பல்ல
பொதிகை மலைக்குறு
முனிவனும் ஒப்பல
புகழ்புனை
குன்றை முனிக்கென்பர்
மெய்யுள சிவசா
தனமும் வெளிப்பட
வெண்ணீ றெழுதிய
கண்ணேறும்
கையும் திகழ்மணி
கண்டமும் ஒளிதரு
கவளிகையும்
புத்தக ஏடும்
நையும் திருவுளம்
அழியும்தொறும்
அரகரஎனும் நாமமும்
நாம்எல்லாம்
உய்யும் படிஅருள்
கருணையும் அழகிதெ
னத்தொழு தனர்உல
கவரெல்லாம்
இப்படி இப்படி தன்னில்
விதிப்படி
இம்பரும் உம்பரும்
ஏனோரும்
அப்படி சூழ அரத்திரு
வீதிவ
லம்செய்து
அணைந்து
என்பன.
|