பக்கம் எண் :

New Page 1

348

             தாலப் பருவம்

    சேக்கிழார் இறைவன் திருவடிப் பேற்றினைப் பெற்ற நிலையினை ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் குறிப்பிடுகையில்,

        தொண்டர் சீர்பரவு சேக்கி ழார்குரிசில்
            தூய தில்லைநகர் தன்னிலே
        பண்டு மூவர்பதி கத்து வந்தஅறு
            பத்து மூவர்கதை தனையுணர்ந்து
        அண்ட வாணர்அடி யார்கள் தம்முடன்
            அருந்த வம்தனில் இருந்துபின்
        இண்டை வைத்தசடை அம்ப லத்தவர்
            எடுத்த பாதநிழல்  எய்தினார்

என்று குறித்துள்ளார்.

    இது குறித்துத் திரு பிள்ளை அவர்கள்,

    “கூற்றம் குதித்துய்ந்திட வலர்யார்
     கொற்றக் கலைக் கண நாதர்களொடு
     கூடுபு மகிழ்பவர் ஆர்”

என்று பாடியுள்ளதையும் ஓர்க.

    இந்நிலைகள் எல்லாம் தேவர்களாலும் அடைதற்கரியன.  இதனை உட்கொண்டே ஆசிரியர், “விண்தலையோரும் பெறல் அரும் இன்பம் விராவும் திறலினர் ஆர்” என்று வினவியுள்ளனர்.  குன்றத்தூர் மரஞ் செடி கொடி வளம் மிக்குடைமையின், தண்டலை சூழும், குன்றை என்றனர்.                                                  

(31)