பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

35

    சேக்கிழாரும் “பெரியவர்தம் தூய அடியிணை தலைமேல் கொண்டு “ “பொற்றாள் சென்னிவைத்து“  என்று போற்றிய தோடின்றி,

உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலைமிசை வைத்து வாழும் தலைமைநம் தலைமை ஆகும்

என்றும் அறிவித்துள்ளார்.

இலைமலிந்தவேல்நம்பி

    இலைமலி எனும்கவியுள் எமுபுவன மும்பரசும்
        எழுமுனிவர் ஏத்தஅமர்வார்
    எழுபுரவி வையமிசை எழுகதிரும் வட்குமணி
        எழுஉருவும் உட்கும்ஒளிசால்
    மலைமலி புயத்தர்எறி பத்தர்முதல் எழுபவமும்
        மாய்த்தவிறல்  எழுவோரையும்
    வாயார வாழ்த்தித் துதித்தவர் அடிக்கமலம்
        மலர்முடிக் கணிஆக்குவாம்
    கலைமலி பெரும்புலவர் கைக்குவிக் கக்கலைக்
        கன்னிநின் றேவல்கேட்கக்
    கனகசபை யார்முதல் அளித்தருள அளவாம
        கத்துவம் அடைந்திருந்தும்
    அலைமலி சுணங்கன்ஒப் பேன்என் றுரைத்தருளி
        யாம்பெருக் கத்துவேண்டும்
    ஆன் றபணி வெனும்மொழிப் பொருள்தேற்று குன்றைநகர்
        ஆளியைக் காக்கஎன்றே

    [அ-சொ] கலை-சாத்திர அறிவு, மலி-மிகுந்த, கலைக் கன்னி-சாத்திரங்கட்குத் தேவியான சரசுவதி, ஏவல்-சொல்லிய பணி, கனகசபையார்-பொன் சபையில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமான்.  கனகம்-பொன், முதல்-புராணம் பாடுதற்கு முதல் தொடரான உலகெலாம் என்னும் முதல்,