தர
தரித்துக் கொள்ள,
முடி-கிரீடம் குன்றையாம்-குன்றத்தூராகிய, பானு-சூரியனே.
விளக்கம் :
பாட்டுடைத் தலைவனான குழந்தை கையுடன் கையைச் சேர்த்துக் கொட்டும் பருவமே சப்பாணிப் பருவம்
எனப்படும். சப் என்ற ஒலிஎழக் கையைத் தட்டுதலால் சப்பாணியாயிற்று, பாணி-கை. இது குழந்தை
பிறந்த ஒன்பதாம் மாதம் நிகழும் நிகழ்ச்சி. “ஒன்பதாம் திங்களில் உயர்சப்பாணியும்” என்று
பிங்கலந்தை நிகண்டு கூறுதலையும் காண்க.
அறிவு பலவாகப் பாகுபடுத்திக்
கூறப்படினும், நூல் அறிவு, நுண் அறிவு என இருபாலாகி இசைக்கவும் பெறும். நூல் அறிவே கல்வியறிவாகும்.
இதனை முதற்கண் பெற வேண்டுதலின் ஈண்டு “அற முதல் கல்வி” என அடை கொடுத்துக் கூறினர். நூல்
அறிவின் பயன் அறம், பொருள் இன்பம் வீடு இவற்றை உணர்வதாகும், இதனை, “அறம் பொருள் இன்பம்
வீடு அடைதல் நூற்பயனே” என்னும் நூற்பாவால் உணரலாம். இவற்றை எவரும் விரும்புவர் அல்லரோ?
“ஆகவே, விழை அறமுதல் கல்வி அறிவு,” என்றனர் மேலும் இந்த உண்மையினை,
அறம்பொருள் இன்பமும்
வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும்
நாட்டும்-உறுங்கவல்ஒன்
னுற்றுழியும் கைகொடுக்கும்
கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்
குற்ற துணை.
என்று குமர குருபரர்
வாக்காலும் உறுதிப் படுத்தலாம்.
‘மாண் அறிவு என்பது
நுழைமாண் நுண்புலன் ஆகும். அதாவது உள் நுழைந்து பொருளின் நுட்பத்தினை நன்கு தெளிதல்.
“நுண்மாண் நுழைபுலம்
இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை
அற்று”
என்பது வள்ளுவர்
வாக்கு.
|